விவசாயம்- பண்ணைத் தொழில்களுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு! மத்திய அரசு அதிரடி

மத்திய அரசு விவசாயிகளின் கவலையைப் பகிர்ந்துகொள்கிறது. பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி வெளியிடப்பட்ட நெறிமுறைகளில் திருத்தம் கொண்டுவந்துள்ளது.

பண்ணைத் தொழில் சமூகத்தினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதைக் கருத்தில் கொண்டு தேசிய அளவில் நடைமுறையில் உள்ள முழு அடைப்பிலிருந்து விவசாயம்- பண்ணைத் தொழில் மற்றும் அது சார்ந்த செயல்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது .

இது தடையற்ற அறுவடைப் பணிகளுக்கு வழி வகுக்கும் . இதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி , உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆகியோருக்கு மத்திய வேளாண்மை விவசாயிகள் நலன் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு தோமர் நன்றி தெரிவித்துள்ளார்.

முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டது முதல் திரு தோமர் , விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறார். விவசாயிகள் தங்கள் பயிர்களை அறுவடை செய்து தானியங்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடம் விளக்கப்பட்டது. விவசாயிகளின் மற்றும் சம்பத்தப்பட்ட அமைப்புகளின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும், பிரதமரின் உத்தரவின் பேரிலும், அரசுஇந்தப் பிரச்சினைகளைப் பரிவுடன் பரிசீலித்தது. அதனை அடுத்து விவசாயிகளின் நலனையும், அவர்கள் சார்ந்த சமுதாயத்தினரின் நலன்களையும்
கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்கப்பட்டது.

பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 10(2)(I) இன் படி தேசிய நிர்வாகக் குழுதலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் ஆணை எண் 40-3/2020-DM-I(A)ன் படி 2020 மார்ச் 24 & 25 தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட தேசிய அளவிலான முழு அடைப்பு சார்ந்த நெறிமுறைகளில் இரண்டாவது சேர்க்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

இந்த சேர்க்கையின்படி, விவசாயம் அது சார்ந்த விளைபொருள்கள், சேவைகள், பிற செயல்பாடுகள் 21 நாள் முழு அடைப்பிலிருந்து விலக்கு பெற்றவற்றின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து தடையற்ற வகையில் அறுவடைப் பணிகள் நடைபெற வழிவகை ஏற்பட்டுள்ளது. இதற்காக மத்திய வேளாண் துறை அமைச்சர் பிரதமருக்கும் ,உள்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இரண்டாவது சேர்க்கையின்படி கீழ்க்கண்டவை முழு அடைப்பிலிருந்து விலக்கு பெறுகின்றன:

  1. குறைந்தபட்ச ஆதரவு விலை செயல்பாடு உள்ளிட்ட, வேளாண் பொருள்களைக்
    கொள்முதல் செய்வதில் ஈடுபட்டுள்ள முகமைகள்.
  2. வேளாண் விளைபொருள் விற்பனைக் குழு செயல்படுத்தும் அல்லது மாநில அரசுகள்
    அறிவிக்கைகளின்படி செயல்படும் கொள்முதல் நிலையங்கள்.
  3. விவசாயிகளின் பண்ணைத் தொழில்கள், வயல்களில் பணிபுரியும் பண்ணைத் தொழிலாளர்கள்.
  4. பண்ணை எந்திரங்கள் தொடர்பான ‘வாடிக்கை வாடகை மையங்கள்’ உரங்கள், பூச்சிக்கொல்லிகள், விதைகள் உற்பத்தி மற்றும் சிப்பமிடும்
    தொழில் பிரிவுகள்.
  5. அறுவடை எந்திரங்கள், விவசாய தோட்டத்தொழில் கருவிகள் போன்ற விவசாயப்
    பணிகளுக்கு உதவும் எந்திரங்களை மாநிலத்திற்குள்ளேயும் மாநிலங்களுக்கு
    இடையிலேயும் கொண்டு செல்லுதல்.

முழு அடைப்பின் போது விவசாயிகளும், சாமான்ய மக்களும் எவ்வித இன்னல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கும், சாமான்ய மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், விவசாய மற்றும் பண்ணை செயல்பாடுகள் தடையின்றி நடைபெறவும் என இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மத்திய அரசு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் , துறைகள், உரிய மாநில \ யூனியன் பிரதேச அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

Exit mobile version