உலகத்தை ஆட்டி படைத்து வரும் கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யும் கருவியை மத்திய மாநில அரசுகள் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை என திரும்ப கொடுத்துவிட்டது.
மத்திய மாநில அரசுகள் கொள்முதலில் ஊழல் செய்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கோஷமிட்டார்கள். ஸ்டாலின் ஆளும் அதிமுக அரசின் மீது தொடர் குற்ற்றச்சாட்டை சுமந்து வந்தார். ஆனால் கேரளா ஆந்திராவை பாராட்டினார் ஸ்டாலின். கொள்முதல் விஷயத்தில் என்ன நடந்தது என்பதை காண்போம்
1) சீன முகவர்களாக இருக்கும் இந்தியர்கள், அசாதாரணச் சூழலைப் பயன்படுத்தி சக இந்தியர்களின் உயிர்களுடன் விளையாடுவதும், கொள்ளை லாபம் ஈட்ட முற்படுவதும் மன்னிக்கவே முடியாத குற்றம்.
2) சர்வதேச மதிப்பீட்டைப் பெற்ற விரைவுப் பரிசோதனைக் கருவிகளுக்கு ICMR ஒப்பந்தப் புள்ளி கோருகிறது.
3) வோண்ட்ஃபோ பயோடெக், ஜூஹாய் லிவ்சன் ஆகிய 2 நிறுவனங்கள் போட்டியில் இருந்தன.
4) ரூ 1204/ ரூ 1200/ ரூ 844/ ரூ 600/ ஆகிய “நான்கு” ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டன.
5) அதில் மிகக் குறைந்த விலையிலான ரூ 600/ க்கு வோண்ட்ஃபோ நிறுவனத்தின் விரைவுப் பரிசோதனைக் கருவி தேர்ந்தெடுக்கப் பட்டது.
- வோண்ட் ஃபோ நிறுவனத்திடமிருந்து கருவிகளை நேரடியாகப் பெற ICMR முயற்சித்த போது அந்த நிறுவனம் கருவிகளுக்கு உத்தரவாதம் தர மறுத்ததுடன் 100% முன்பணமும் கோரியது.
- எப்போது கருவிகள் வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்கவும் அந்தச் சீன நிறுவனம் தயாராக இருக்கவில்லை.
- அப்போது அந்த நிறுவனத்தின் இந்திய முகவர் எந்தவித முன்பணமும் கோராமல் விரைவுப் பரிசோதனைக் கருவிகளை 600 ரூபாய்க்கு வழங்க முன்வந்தார்.
6) அந்தக் கருவிகளின் இறக்குமதி விலை ரூ 245/. அதை 145% லாபத்தில் ரூ 600/ க்கு அந்த முகவர் வழங்கி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
7) அவற்றை ரூ 400/ க்கு ICMR க்கு வழங்க வேண்டும் என்று தில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
8) அதே முகவரிடமிருந்து விரைவுப் பரிசோதனைக் கருவிகளை… ஆந்திர அரசு ரூ 730/ க்கும் கேரள அரசு ரூ 699/ க்கும் தமிழக அரசு ரூ 600/ க்கும் வாங்கி இருக்கிறது.
9) முன்பணம் வழங்காமல் பெறப்பட்டு இருக்கும் தரம் குறைந்த விரைவுப் பரிசோதனைக் கருவிகள் அனைத்தையும் அந்த முகவரிடமே திருப்பிக் கொடுத்துவிடும்படி இப்போது மாநிலங்களை ICMR வலியுறுத்தி இருக்கிறது.
10) முன்பணம் கொடுக்காததால் இழப்பில்லாமல் இந்தியா தப்பி இருக்கிறது.
11) இந்தியாவில் மட்டுமல்ல – ஸ்பெயின், செக் குடியரசு, ஸ்லோவேகியா, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் சீனாவிலிருந்து தரமற்ற விரைவுப் பரிசோதனைக் கருவிகளை – அந்தந்த நாட்டிலுள்ள முகவர்கள் கொள்ளை லாபத்துக்கு விற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது!
இதனால் இந்தியாவிற்கு எந்த பணமும் இழப்பில்லை! தமிழக எதிர்க்கட்சி தலைவர் அதிமுகவை விமரிசிக்கும் முன் என்ன நடந்தது என அறியாமல் புலம்பி வருகிறார்!