சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்..
தமிழகம் அதிக அளவில் இந்து கோயில்கள் இருந்து வரும் புகழ்பெற்ற மாநிலமாக இந்தியாவில் விளங்குகிறது. நம்முடைய முன்னோர்கள் அனைவரும் அதிக அளவில் தங்களுடைய சொத்துக்களை கோவில் பெயரில் தானமாக கொடுத்து இருக்கிறார்கள். கோவில் பெயரில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்தில் அவர்கள் அப்போது விட்டு சென்ற நிலங்கள் தற்பொழுது பல ஆக்கிரமிப்பில் தான் இருக்கிறது. அது மட்டும் கிடையாது அவற்றை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாகவும் ஒரு குற்றச்சாட்டில் எழுந்து இருக்கிறது.
கோவிலை காக்க வேண்டிய அறநிலையத் துறையை தற்பொழுது கோவிலின் சொத்துக்களை கொண்டாடும் வகையிலும் அவற்றை கொள்ளையடித்துக் கொண்டு செல்லும் வகையிலும் செயல்களை செய்து வருவதாக இந்து முன்னணியினர் குற்றம் சாட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு எதிராக செய்யும் நடவடிக்கைகளை இந்து முன்னணியினர் ஆங்காங்கே கண்டுபிடித்து உண்மைகளை மக்களுக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இது குறித்து இந்து முன்னணியினர் தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தள பக்கங்களில் இதுபற்றி பதிவிடும் பொழுது, “மர்ம நபர்கள் வெறிச்செயல், காரணமாக நெல்லை – தாமிரபரணி ஆற்று பாலம் அருகே ஆற்றங்கரை சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு! திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிலை உடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த செயலுக்கு இந்துமுன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















