நெல்லை தொகுதியில் பாஜக தோற்றதற்கு உட்கட்சி பூசல் தான் காரணம் என்று இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் பேசியதாக உண்மைக்கு புறம்பான பொய் செய்தியை வெளியிட்ட சன் தொலைக்காட்சி…
இந்துமுன்னணி அமைப்பிற்கும்; இந்துமக்கள் கட்சிக்கும் (அரசியல் கட்சி) வேறுபாடு அறியாமல்தான் தொலைக்காட்சி நிறுவனம் உள்ளதா? சன் தொலைக்காட்சியில் வெளியான ஆடியோவிற்கும் இந்துமுன்னணி நெல்லை மாவட்ட செயலாளருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் வேண்டுமென்றே பொய் சொல்லி செய்தி வெளியிட்டுள்ளதாக இந்துமுன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இந்து மக்கள் கட்சி குறித்த செய்திகளை இந்துமுன்னணி செய்ததாக செய்தி வெளியிட்டு தொடர்ந்து பலமுறை சன் டிவி நிர்வாகம் இந்துமுன்னணி இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதாக வழக்கறிஞர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து முன்னணி RSS அமைப்பின் கிளை அமைப்பாகும். ஆனால் இந்து மக்கள் கட்சி ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளை அமைப்பு கிடையாது என்பதை, இது தெரிந்தே வேண்டுமென்றே சன்டிவி நிர்வாகம் இந்துமுன்னணி இயக்கத்தையும் அதன் நிர்வாகிகளையும் தொடர்ந்து களங்கப்படுத்தி வருகிறது.
சன் தொலைக்காட்சியில் நேற்று வெளியிட்ட ஆடியோவிற்கும் இந்துமுன்னணி இயக்கத்திற்கும் இந்துமுன்னணி நெல்லை மாவட்ட செயலாளராக உள்ள சுரேஷ் என்பவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில் நெல்லை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் பேசியதாக செய்தி வெளியிட்டு அவதூறு ஏற்படுத்தியதாக கூறி, இந்து முன்னணி நெல்லை மாவட்ட செயலாளர் திரு A.சுரேஷ் என்பவர் சன்குழுமத்தின் நிர்வாக செயல் தலைவர் கலாநிதி மாறன் அவர்களிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியும், உடனடியாக வருத்தம் தெரிவித்து மறுப்பு செய்தி வெளியிடவும் வலியுறுத்தி இந்துமுன்னணி மாநில செயலாளர் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் மூலமாக வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியுள்ளார்…