மனு நீதியின் வடிவமாக குடும்பத்தொழில் செய்து கொண்டு வரும் நடிகர் சூர்யா மக்களை காக்கும் மருத்துவ படிப்புக்கு ஏகலவியன்களை தேடும் நீட் தேர்வை மனு நீதி தேர்வு என்று கூறி காமெடி செய்து இருக்கிறார்.
ரஜினி மாதிரி சொந்த முயற்சியினால் முன்னேறிய எத்தனையோ ஏகலைவன்களே வாய் மூடி அமைதியாக மனு தர்மம் பற்றி பேசாமல் இருக்கும் பொழுது சூர்யா ஸ்டாலின் போன்ற அரை வேக்காடுகள் தங்களின் குடும்ப தொழிலை செய்து கொண்டு மனுதர்மம் பற்றி பேசுவது தான் காமெடியாக இருக்கிறது.
சூர்யா நடிகர் அவருடைய மனைவி ஜோதிகா நடிகை, அப்பா சிவகுமார் நடிகர், தம்பி கார்த்தி நடிகர், தங்கை பிருந்தாபாடகி என்று சூர்யாவின் குடும்பமே தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து கொண்டுள்ளார்கள்.
ஆனால் அந்த … மனுநீதி பற்றி பேசுகிறார் எத்தனையோ சிறந்த கலைஞர்கள் வர வேண்டிய தமிழ்த் திரையுலகில் தந்தை சிவகுமாரின் செல்வாக்கினால் மட்டுமே திரையுலகில் நுழைந்து விட்டுமனுநீதி பற்றி பேசுவது தான் காமெடியாக இருக்கிறது.
தந்தை தொழிலை குடும்பமே செய்யச்சொன்ன மனுதர்மம் சரியென்று உங்களுக்கு தெரிந்ததால் தானே பல துறைகளில் செல்ல வாய்ப்புகள் இருந்தும் அப்பாவின் தொழிலான நடிகனாக மாறினீர்கள்.
அமெரிக்காவில் எம்இ படித்து வேலைபார்த்து வந்த உங்கள் தம்பி கார்த்தியைலட்சங்களில் சம்பளம் கிடைத்த வேலையை விட்டு விட்டு குடும்ப தொழிலான சினிமாவில் கொண்டு வந்து கோடிகளில்புரள வைத்து விட்டு மனுதர்மம் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
எத்தனையோ பேர் சினிமா கனவுகளுட ன் சென்னையை நோக்கி ஓடி வந்து சோத்துக்கு வழியின்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
அவர்களுக்கு ஒருவாய்ப்பு கூட கிடைக்க விடாமல் உங்கள்குடும்பமே தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து இருக்கிறது.மூன்று அடி மூன்று அங்குலம் இருந்து கொண்டு நீயெல்லாம் உங்கப்பா துரோணர் ஸாரி மார்கண்டேயர் உதவியால் நடிகனாக மாறியதால் எத்தனை ஏகலைவன்கள் சினிமா வெளிச்சம் படாமலே வாழ்ந்து மடிந்து இருக்கிறார்கள் தெரியுமா?
இந்த லட்சணத்தில் நீங்கள் நீட் தேர்வை மனுதர்மத்துடன் இணைப்பது தான் காமெடியாக இருக்கிறது.உங்கப்பா மாதிரிவசதியான மனு தர்மவாதிகளால் தங்க ளில் தொழிலை பிள்ளைகளுக்கும் சுலப மாக கொண்டு செல்ல முடியும்.
ஆனால் வழியில்லாத ஏகலவியன்களை உலகம் அறிய அவர்களிடம் திறமை இரு ந்தால் மட்டுமே சாத்தியமாகும்.இதைரஜினி போன்ற ஏகலவியன்கள் அறிந்துஇருக்கிறார்கள்.
அதனால் தான் நீட் தேர்வு பற்றி அமைதியாக இருக்கிறார்கள்தாத்தா டாக்டர் அப்பா டாக்டர் பையன் டாக்டர் என்று எத்தனையோ டாக்டர் குடும்பங்கள் குல தொழிலாக மருத்துத்துத்தை தங்களின் பிடியில் வைத்து இருந்தார்கள். ஆனால் இப்பொழுது சாமானியமாணவரும் திறமை இருந்தால் டாக்டரா க முடியும் என்று நிரூபித்து வருகிறது நீட் தேர்வு.
தகுதி இல்லாமல் குடும்ப தொழிலான அப்பா செய்த தொழிலையே தாங்களும் செய்யும் கோமாளிகள் மனு தர்மம் பற்றி பேசாமல் தயவு செய்து வாயை மூடிக் கொண்டு இருங்கள். ஏனென்றால் நீங்கள் அனைவரும் மனு தர்மத்தின் அடையாளம் தான்.
கட்டுரை:- எழுத்தளர் விஜயகுமார் அருணகிரி.