சூர்யா, ஜோதிகா மீது புகார் – வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
ஜெய்பீம் பட விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மீது புகார்
ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் புகார்
மேலும் உண்மை சம்பவத்தில் லாக்அப்பில் வைத்து இருளர்கள் மீது தாக்குதல் நடத்தியது வன்னியர் இல்லை என்கிற போது வேண்டுமென்றே அந்த கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கொலை செய்த அந்த இன்ஸ்பெக்டர் வீட்டில் வன்னியர்களின் அக்னி கலசம் பொதித்த காலண்டர் மாட்டப்பட்டிருந்தது.
இந்த பிரச்சினை தொடர்பாக வன்னிய சேனா எனும் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து ருத்திர வன்னிய சேனா நிறுவனத் தலைவர் சந்தோஷ் நாயக்கர் அளித்த மனுவில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் படம் எடுத்துள்ளனர். தமிழ் பேசாத வடநாட்டு நபரை கன்னத்தில் அறையும் காட்சி மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது.
பச்சையம்மாள் என்ற பெயர் அந்த காலங்களில் வன்னியர்களுக்கு மட்டுமே வைக்கப்படும் நிலையில் அந்த பெயரை இருளர் சமூகத்தை சேர்ந்தவருக்கு பெயர் வைத்ததன் மூலம் எங்கள் சமூகத்தை வேண்டுமென்றே அவமானப்படுத்தியது என்பன உள்ளிட்டவை அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்கு
புகார் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல்நிலைய ஆய்வாளருக்கு சைதை நீதிமன்றம் உத்தரவு.முதல் தகவல் அறிக்கையை மே 20ல் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு.தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தில் ஜெய்பீம் படத்தில் காட்சி என்ற புகாரில் உத்தரவு
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















