சுஷாந்தின் மரண வழக்கை…முறைகேடாக திசை திருப்பிய மகாராஷ்டிரா மாநில கூட்டணி அரசின் அரசியலாகட்டும்…
கேள்வி கேட்கும் கங்கானாவின் அலுவலகத்தை இடித்துத் தள்ளும் அதிகார பாசிசமாகட்டும்…
திரையுலக முறைகேடான வலைப்பின்னலை குறித்த குற்றச்சாட்டுகளில் உள்ள குறைந்த பட்ச நியாயங்களை பேசுவதை விட்டுவிட்டு…கங்கானாவின் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு வந்ததை மறுத்துவிட்டதாக பதிவிடும் பி.சி.ஸ்ரீராம் போன்றவர்களின் அபத்தமாகட்டும்…
காங்+கூட்டணி ஊடகவியலாளர்களின் வெளிப்படையான போதை + திரையுலக + மஹாராஷ்டிரா மாநில கூட்டணி அரசுக்கான ஆதரவாகட்டும் …
இந்திய சட்ட முறைகள், மாநில அதிகாரம், மாநிலங்களுக்கு இடையிலான அதிகாரங்கள், மத்திய அதிகாரம் , நீதித்துறையில் வெளிப்படையாக தெரியும் உயர்நீதி மன்றங்கள் & உச்சநீதிமன்றத்துக்கு இடையிலான வித்தியாசங்கள், மாநில விசாரணை அமைப்புகளின் அதிகாரங்கள், மத்திய விசாரணை அமைப்புகளின் அதிகாரங்கள்…போன்றவற்றில் உள்ள போதாமைகளை..
மஹாராஷ்ட்ர மாநில கூட்டணி ஆட்சியின் அடாத போக்கு .. வெளிகொண்டுவருகின்றது.
தேவை…வரையறைகள் மீதான தெளிவான சீர்திருத்தங்கள். மீறுவோர் மீது …உடனடியாக பாயும் தண்டனை…போன்றவை.
வழ வழா சட்டங்களையும், மீறுவோரை வருடக்கணக்காக விசாரிக்கும் தீர்ப்பு மன்றங்களையும் வைத்துக் கொண்டு…ஒன்றும் ஆகப்போவதில்லை.
”அனைத்துமே அரசியல்வாதிகளுக்கு தான் . மிச்சம் மீதி இருப்பவை தான் மக்களுக்கு ! ”…என்கிற நிலை தான் …
பல் துறைகளை சார்ந்த பலரையும் …உள்ளூரில் மாநில அரசியல் அதிகாரங்களுக்கு வேறு வழியின்றி ஜால்ரா போடுபவர்களாக மாற்றுகின்றன.
நன்றி : பானு கோம்ஸ்