தீவிரவாதத்தின் வாசல்களில் ஒன்றாக தப்லிக் ஜமாத் இருப்பதால் அதை தடை செய்வதாக இஸ்லாமிய இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா,அரசாணை பிறப்பித்துள்ளது. தப்லிகி ஜமாத் தீவிரவாதத்திற்குள் நுழைவதற்கான நுழைவாயிலைத் தவிர வேறில்லை என்று கடுமையாக சாட்டியுள்ளது.
இது குறித்து சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சர் டாக்டர் அப்துல்லதீப் அல் ஷேக் தடை செய்ததற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவானது :தப்லிகி ஜமாத் மற்றும் தாவா குழுவை தடை செய்த தோடு, அரசின் இந்த முடிவு குறித்து அனைத்து மசூதிகளின் இமாம்களும்,தொழுகைக்கு வரும் மக்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.மேலும் இந்த இரண்டு அமைப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.மேலும் அந்த இயக்கத்துடன் தொடர்பில் இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தப்லீக் ஜமாத்திற்கு பெருமளவிலான நிதியுதவி சவூதி அரேபியாவில் இருந்து கிடைத்து வந்தது. எனவே இந்த தடையால் உலகின் பல நாடுகளில் தப்லீக் ஜமாத்தின் செயல்பாடுகள் இனி மெல்ல மெல்ல முடங்கும் என கூறப்படுகிறது.
சவூதியை தொடர்ந்து வேறு சில நாடுகளும் தப்லீக் ஜமாத்திற்கு தடை விதிக்கலாம் என சொல்லப்படுகிறது. அதே நேரம் பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, வங்கதேசம் ஆகிய நாட்களில் இந்த அமைப்பில் நிறைய பேர் உள்ளதால் அங்கு எவ்வாறு தடை விதிப்பது என்பது குறித்துஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தப்லிகி ஜமாத் அமைப்பு முத்தலாக், ஹலாலா மற்றும் பலதார மணம் ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றுவதோடு, இஸ்லாத்தில் இன்றியமையாமல் கடைபிடிக்க வேண்டிய அம்சம் எனவும் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு, மோடி அரசு முத்தலாக் சட்டத்தை இயற்றியபோது, தப்லிகி ஜமாத் அமைப்பினர் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரானா பரவல் காரணமாக இருந்தவர்களும் இந்த தப்லிக் ஜமாத் அமைப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நிஜாமுதீன் மர்காஸில் நடைபெற்ற தப்லிகி ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள் சுமார் 95% பேருக்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள்.இவர்கள் தான் நாட்டு முழுவதும் கொரோனா பரவ முக்கிய காரணம் ஆகும் நிஜாமுதீன் மார்க்காஸ் ஒரு கொரோனா ஹாட்ஸ்பாட் ஆகும். இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த தப்லிக் ஜமாத்தினார்களின் சுகாதாரப் பணியாளர்களிடமும், மருத்துவர்கள், காவல்துறையினர் மீது கல் வீசுவது மற்றும் உமிழ்வது நிர்வாகத்தினரிடமும் மோசமாக நடந்து கொண்ட சம்பவங்கள் நடந்தேறியது.