Tag: covid 21

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்கள்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,460 ஆகக் குறைந்துள்ளது. இதையடுத்து, தொடர்ந்து 10-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் இரண்டு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கொவிட் தொற்றுக்குத் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 14,77,799 ஆக உள்ளது. இது, நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் வெறும் 5.13 சதவீதமாகும். இந்த எண்ணிக்கை 6-வது நாளாக 20 லட்சத்திற்கும் குறைவாக ஏற்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=Om2ie10Gu-E&t=15s சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 77,449 சரிந்துள்ளது. தொடர்ந்து 24-வது நாளாக புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,89,232 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விட கூடுதலாக 74,772 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 2,69,84,781 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 93.67 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,36,311 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 36,47,46,522 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. https://www.youtube.com/watch?v=QUscptQNbDw வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 6.54 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி வீதம் 5.62 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 13 நாட்களாக இந்த எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 23.13 கோடி தடுப்பூசிகளும், கடந்த 24 மணி நேரத்தில் 33,53,539 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 32,42,503 முகாம்களில் 23,13,22,417 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பியது திமுக தான் வினோஜ் ப செல்வம் அதிரடி!

சென்னை துறைமுகத்தில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவும் வகையில் 3 ஆக்ஸிஜன் செறிவூட்டியை ஜெயின் சங்கத்திடம் பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் வழங்கினார் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு ...

பாஜக இளைஞரணி சார்பில் 2000 குடும்பங்களுக்கு மருத்துவ கிட்!

கொரோனா பெருந்தொற்று, இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழகம், கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ...

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x