இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பள்ளி கல்வியை பற்றிய இரண்டு நாள் மாநாட்டை மத்திய கல்வி அமைச்சகம் நடத்துகிறது. இந்தமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 11 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் மாநாட்டில் உரையாற்றுகிறார் முந்திய கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்டு 34 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கை-2020, பள்ளி மற்றும் உயர்கல்வியில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்குவதை இலக்காக கொண்டுள்ளது. https://www.youtube.com/watch?v=p3DM24NpAI8 இந்தியாவை சமமான மற்றும் துடிப்பான அறிவு மையமாக மாற்றுவதே இந்த கொள்கையின் லட்சியமாகும். இந்தியாவை சர்வதேச வல்லரசாக மாற்றும் வகையில் கல்வி அமைப்பை பங்கேற்க செய்யும் வகையில் இந்த கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற ஆசிரியர்களும் இதர ஆக்கப்பூர்வமான ஆசிரியர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள். தேசிய கல்விக் கொள்கையில் பள்ளி கல்வி குறித்து உள்ள சில முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்துவதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.