Tag: ModiGovt

இந்திய சரித்திரத்தில் ஒரே மாதத்தில் 10 ஏவுகணைகள் ! உலகிற்கு இந்தியா கொடுத்த அதிர்ச்சி! அச்சத்தில் சீனா!

இந்திய சரித்திரத்தில் ஒரே மாதத்தில் 10 ஏவுகணைகள் ! உலகிற்கு இந்தியா கொடுத்த அதிர்ச்சி! அச்சத்தில் சீனா!

இந்தியா கடந்த மாதத்தில் மட்டும் சிறிதும் பெரிதுமாக 10 ஏவுகனைகளை சோதித்து பெரும் அதிர்ச்சியினை உலகுக்கு கொடுத்துள்ளது, இது இந்திய சரித்திரத்தில் இதுதான் முறை சீன அச்சுறுத்தல் ...

இந்திய கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்த டிஜிட்டல் பட்டா வழங்கும் பிரதமர் மோடி.இனி பினாமி சொத்துக்கு ஆப்பு!

இந்திய கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவும்,  மற்றும் பல லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலும் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளை பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் முக்கிய நிகழ்வை பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அக்டோபர் 11-ம்தேதி தொடங்கி வைக்கிறார். மொபைல் போன்கள் வழியே அனுப்பப்படும் குறுஞ்செய்தி இணைப்பின் வழியே சொத்து அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை,  ஒரு லட்சம் சொத்து உடமையாளர்கள் பெறும்  வசதி தொடங்கப்பட உள்ளது. அதன்பின் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சார்பில்  சொத்து அட்டைகள் நேரடியாக வழங்கப்படும்.  கர்நாடகாவில் 2, உத்தரகாண்ட்டில் 50, மத்தியபிரதேசத்தில் 44, மகாராஷ்டிராவில் 100, ஹரியாணாவில் 221, உத்தர பிரதேசத்தில் 346 என  6 மாநிலங்களின் 763 கிராமங்களைச் சேர்ந்தவர்கள்  இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர்.  மகாராஷ்டிரா மாநிலத்தைத்தவிர மேற்குறிப்பிட்ட இதர மாநிலங்களைச் சேர்ந்த பயனாளிகள் ஒரு நாளுக்குள் சொத்து அட்டைகளை பெறுவார்கள். சொத்து அட்டைகள் வழங்க குறைந்த பட்சத்தொகையை வசூலிக்கும் ஒரு முறையை மகாராஷ்டிரா அரசு தொடங்க உள்ளதால், இந்த திட்டம்அந்த மாநிலத்தில் தொடங்குவதற்கு ஒரு மாதம் ஆகும். கடன் பெறவோ அல்லது இதர நிதி பயன்பாடுகளுக்காகவோ கிராம மக்கள், தங்களது சொத்துகளை,  ஒரு நிதி சொத்தாக உபயோகிப்பதற்கு இந்த நடவடிக்கை  வழி வகுக்கும். தவிர,  பல லட்சக்கணக்கிலான கிராம சொத்து உடமையாளர்கள் பயன் அடையும் வகையில் மிகவும் நவீன முறையிலான தொழில்நுட்பத்துடன் கூடிய இதுபோன்ற பெரிய அளவிலான நடைமுறை  இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்வின்போது பிரதமர் சில பயனாளிகளுடன் உரையாட உள்ளார். மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்வு அக்டோபர் 11ம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கும்.  மேலும் இந்த டிஜிட்டல் பட்டா முறை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்டுகிறது. ஏற்கனவே சொத்துக்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் ஆதார் அவசியம், இனி அனைத்தும் ...

ஆத்மனிர்பர் பாரத் மகாத்மா காந்தியின் தொலை நோக்கு பார்வையான சுதேசி இயக்கமும் கிராமப்புற மறுமலர்ச்சியும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

ஆத்மனிர்பர் பாரத் மகாத்மா காந்தியின் தொலை நோக்கு பார்வையான சுதேசி இயக்கமும் கிராமப்புற மறுமலர்ச்சியும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

தன்னிறைவு கொண்ட சமுதாயத்தை உருவாக்க மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் முழுமூச்சுடன் செயல்படுத்தப்பட வேண்டும்  என்று காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக  துணைவேந்தர் டாக்டர் பி சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்,  மகாத்மாவின் கனவை நனவாக்குதல் என்ற தலைப்பில் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மக்கள் தொடர்பு அலுவலகம், வேலூர் மற்றும் பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை இணைந்து நடத்திய இணைய கருத்தரங்கில் அவர் இதனைத் தெரிவித்தார். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு, பதினாறாம் நூற்றாண்டு வரை தன்னிறைவடைந்த நாடாகவே இந்தியா இருந்தது என்று கூறிய அவர், சிலப்பதிகாரம் உள்ளிட்ட எந்த ஒரு நூலிலும் பட்டினி,  கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தார். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தொழிற்புரட்சியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு காலனிகளில் இருந்து கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்து அவர்களுக்கு தயாரித்த பொருட்களை விற்றார்கள். அது முதற்கொண்டு தன்னிறைவு சமுதாயமாக இருந்த இந்தியா ஆங்கிலேயர்களையும் மேற்கத்திய நாடுகளையும் சார்ந்திருக்கத் தொடங்கியது என்றும் அவர் மேலும் கூறினார். ஆங்கிலேயரின் இந்தப் போக்கு காந்தியை வெகுண்டெழச்செய்தது. அவர் இந்தியனாய் இரு, இந்திய பொருட்களையே வாங்கு என்ற சுதேசி இயக்கத்தை தொடங்கினார். இதன் காரணமாக ஏராளமான மக்கள் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஆடைகளைத் தீயிட்டுக் கொளுத்தவே, இங்கிலாந்தில் நெசவுத்தொழில் பெரும் பாதிப்படைந்ததாக அவர் தெரிவித்தார் சிறு தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவற்றை மேம்படுத்த மத்திய அரசு ஆத்மனிர்பர் பாரத், ஸ்வச்ச் பாரத் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்று துணைவேந்தர் மேலும் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய காந்திகிராம கிராமிய  பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டாக்டர் டி. ரவிச்சந்திரன், மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை எடுத்துக்கூறினார். எவ்வளவுதான் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி போராடினாலும் அவர் பதவி ஆசையற்று  இருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களும்  காந்திய வழியைப் பின்பற்றுவதாக அவர் தெரிவித்தார். முசோலினியும், காந்தியும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக குரல் கொடுத்தாலும்,  காந்தியின் அகிம்சைப் போராட்டத்தை முசோலினி ஏற்கவில்லை, இதேபோல் ஹிட்லரிடமும் அகிம்சையைக் கடைபிடிக்குமாறு மகாத்மா காந்தி கடிதங்களை எழுதியதாக அவர் மேலும் குறிப்பிட்டார். அனைத்து வயதினரும் மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இணைய கருத்தரங்கில் உரையாற்றிய காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின்  ஊரகத் தொழில் மேலாண்மைத் துறை இயக்குனர் டாக்டர் ஆர் சீரங்கராஜன், தன்னிறைவு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவது குறித்து கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். மாசற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் செயல்படும் ஊரகத் தொழில் துறைகளுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆண்டுக்கு குறைந்தது பத்தாயிரம் ரூபாய் அளவிலாவது கதர் ஆடைகளையும் உள்ளூர் மக்கள் தயாரித்த சோப்பு,, மருந்து, எண்ணெய் முதலியவற்றையும் அவர்களிடமிருந்து வாங்குமாறு அவர் வலியுறுத்தினார். முன்னதாக தொடக்க உரை நிகழ்த்திய சென்னை மண்டல பத்திரிக்கை தகவல் அலுவலக இயக்குனர் திரு குருபாபு பலராமன், மகாத்மா காந்தி எளிய வாழ்வு வாழ்ந்தார் என்றும் தொலைநோக்கு பார்வை கொண்டிருந்தார் என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் மகாத்மா காந்தியின் அதிகாரப் பங்கீடு, அகிம்சை, பொறுப்புத் தன்மை முதலிய பண்புகள்,  எக்காலத்திற்கும் சமுதாயத்திற்குத் தேவை என்று வலியுறுத்தினார். வரவேற்புரை நிகழ்த்திய சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குனர் திரு ஜே காமராஜ், காந்திஜி துணிவுடனும், நெஞ்சுறுதியுடனும், செயல்பட்டார் என்றும், அவரது வாழ்க்கை வருங்கால சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக, மறைந்த மத்திய அமைச்சர் திரு ராம் விலாஸ் பஸ்வானின் மறைவிற்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

அமித்ஷா அதிரடி உத்தரபிரதேச பாணியில் பீகார் தேர்தல் களம்.

உத்தரபிரதேச தேர்தல் மாதிரியே பீகார் தேர்தலிலும் அமித்ஷாவின் சித்து விளையாட்டுகள் ஆரம்பமாகி விட்டன என்றே கூறலாம். பிஜேபி எதிர்ப்பு வாக்குகளை பல முனை போட்டிக்களால் சிதறடிப்பதுமூலமாக கடந்த ...

திடீர் திருப்பம் 2 ஜி வழக்கில் சிக்கிய புதிய ஆதாரம் ! நீலகிரி தூத்துக்குடிக்கு இடைத்தேர்தலா?

டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! அதிர்ச்சியில் திமுக.!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற நடைமுறையை கடைபிடித்ததால் ரூ1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டது என 2010-ம் ஆண்டு மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ...

டிஏபி மற்றும் என்பிகே உரங்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை.

டிஏபி மற்றும் என்பிகே உரங்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை.

டிஏபி மற்றும் என்பிகே உரங்களின் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் தனக்கு இல்லை என்று இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) உறுதிபடத் தெரிவித்துள்ளது. இது ...

தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்

தமிழக போராளிகளுக்கு அடுத்தடுத்து ஆப்புவைக்கும் அமித்ஷா.

சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் அமைக்க மத்திய ...

புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களால் தொழில்சங்கங்களுக்கு  மோடியரசு ஆப்பு

புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களால் தொழில்சங்கங்களுக்கு மோடியரசு ஆப்பு

தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நீண்ட காலமாக ...

அனைவருக்கும் சமநிலையான கல்வி வழங்கவழி வகுத்துள்ளது தேசிய கல்விக் கொள்கை: குடியரசுத் தலைவர் பேச்சு.

21வது நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி நடைமுறையில் மறுசீர்திருத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பங்கேற்பு மற்றும் செம்மையாக்கல் மூலம் ...

உலகநாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து.

உலகநாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து.

பூடான் மன்னருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடல் பூடான் மன்னர் மேதகு ஜிக்மே கேசர் நம்க்யேல் வாங்க்சக்-வுடன் பிரதமர் மோடி இன்று தொலை பேசியில் பேசினார். பிரதமர்  திரு. ...

Page 130 of 143 1 129 130 131 143

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x