ரூ 1.70 லட்சம் கோடி மதிப்பிலான பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் ஒரு பகுதியாக, பெண்கள், ஏழை முதியவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச உணவு தானியங்கள் மற்றும் நிதி உதவியை அரசு அறிவித்தது. இந்தத் தொகுப்பு சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதை மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் கீழ் சுமார் 42 கோடி ஏழை மக்கள் ரூ 53,248 கோடி நிதி உதவியைப் பெற்றனர். இது வரையிலான முன்னேற்றம் மற்றும் பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் பல்வேறு கூறுகள் பின்வருமாறு: * 8.19 கோடி பயனாளிகளுக்கு பிரதமரின் விவசாயிகள் திட்டத்தின் முதல் தவணையான ரூ.16394 கோடி முன்கூட்டியே வழங்கப்பட்டது. * 20.05 கோடி (98.33 சதவீதம்) மகளிருக்கு அவர்களின் ஜன் தன் வங்கிக் கணக்குகளில்முதல் தவணையாக ரூ.10029 கோடி செலுத்தப்பட்டது. முதல் தவணையில் செலுத்தப்பட்ட பணம் ரூ.8.72 கோடி பணம், மகளிர் ஜன் தன் வங்கிக் கணக்குளில் இருந்து 44 சதவீதப் பயனாளிகளால் எடுக்கப்பட்டுள்ளது. 20.62 கோடி (100 சதவீதம்) மகளிர் ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கு இரண்டாவது தவணையாக ரூ.10315 கோடி செலுத்தப்பட்டது. இரண்டாவது தவணையில் செலுத்தப்பட்ட பணம் 9.7 கோடி, 47 சதவீத மகளிரின் ஜன் தன் வங்கிக் கணக்குளில் இருந்து பயனாளிகளால் எடுக்கப்பட்டுள்ளது. * சுமார் 2.81 கோடி முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ. 2814.5 கோடி வழங்கப்பட்டுள்ளது.. அனைத்து 2.81 கோடி பயனாளிகளுக்கும் பலன்கள் இரண்டு தவணைகளில் வழங்கப்பட்டன. * ரூ 4312.82 கோடி மதிப்பிலான நிதி உதவி 2.3 கோடி கட்டிட, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. * இது வரை 101 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் ஏப்ரல் மாதத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 73.86 கோடி பயனாளிகளுக்கு 36.93 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. 65.85 கோடி பயனாளிகளுக்கு 32.92 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் மே மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. 7.16 கோடி பயனாளிகளுக்கு 3.58 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 5.06 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 19.4 கோடி பயனாளிகளில் 17.9 கோடி பயனாளி குடும்பங்களுக்கு 1.91 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு விட்டன. * பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மொத்தம் 9.25 கோடி சமையல் எரிவாயு உருளைகள் பதிவு செய்யப்பட்டு, 8.58 கோடி பிரதமரின் உஜ்வாலா திட்ட இலவச சமையல் எரிவாயு உருளைகள் பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. * பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லாத முன்பணமாக ரூ 4725 கோடியை 16.1 லட்சம் உறுப்பினர்கள் ஆன்லைன் மூலம் எடுத்துப் பயனடைந்துள்ளனர். * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கூலிகள் 01.04.2020 முதல் உயர்த்தப்பட்டுள்ளன. 48.13 கோடி மனித உழைப்பு தினங்களுக்கான வேலை, நடப்பு நிதி ஆண்டில் செய்யப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள கூலி மற்றும் பொருள்களுக்கான பணத்தைக் கொடுக்க மாநிலங்களுக்கு ரூ. 28,729 கோடி வழங்கப்பட்டுள்ளது. ...