பிரதமரின் ஏழைகள் நல உதவி திட்டம் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்த 19.32 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
இந்திய உணவுக்கழகத்தின் அறிக்கையின்படி, FCI தற்போது 253.28 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 531.05 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை ஆகியவற்றை இருப்பு வைத்துள்ளது. ஆகையால், மொத்தம் 784.33 லட்சம் மெட்ரிக் டன் உணவு கையிருப்பில் உள்ளது. (கோதுமை மற்றும் நெல் வாங்குவதைத் தவிர்த்து, அவை இன்னும் கிடங்குகளைச் சென்று அடையவில்லை). தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA), பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டம்,( பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அண்ணா யோஜனா PMGLAY) மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் ...