Tag: nes

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்களின் விநியோகத்திற்கு முக்கிய பங்காற்றிய முதல் மூன்று மாநிலங்கள்…

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தமிழ்நாடு, கர்நாடகாவிற்கு தலா 3000 மெட்ரிக் டன்னுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம்.

பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம்  இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது. 26000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்துள்ளன. இதுவரை 1,534 டேங்கர்களில் 26,281 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=Om2ie10Gu-E&t=15s 376 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 26 டேங்கர்களில் சுமார் 483 மெட்ரிக் டன்  பிராணவாயுவுடன் 6 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. தென் மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் தலா 3,000 மெட்ரிக் டன்னுக்கும் மேல் திரவ மருத்துவப் பிராணவாயுவைப் பெற்றுள்ளன. ஆந்திரப்பிரதேச மாநிலத்திற்கு சுமார் 2800 மெட்ரிக் டன்  பிராணவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=MvbZGShP_e4 தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன. இதுவரை தமிழகத்திற்கு 3237 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5790 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2212 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 3097 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 2804 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 2474 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக சில ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று இரவு தங்களது பயணத்தைத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

POPULAR NEWS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x