Tag: news 7tamil

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 5, 6ம் தேதிகளில் கனமைழைக்கு வாய்ப்பு.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், ஜனவரி 5, 6ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாகிஸ்தான் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள், தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதியில் புயல்  மேலடுக்கு  சுழற்சி காணப்படுகிறது. இதோடு வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்தில், வடக்கு பஞ்சாப்பில் இருந்து வடகிழக்கு அரபிக் கடல் வரை காற்று சங்கமும் இன்று காணப்பட்டது. இதன் காரணமாக வடமேற்கு இந்தியாவில் ஜனவரி 5ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமானது முதல் தீவிர மழை பெய்யும். பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் தில்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் 3 மற்றும் 4ம் தேதிகளிலும், ஜம்மு காஷ்மீர், லடாக், முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ஜனவரி 5, 6ம் தேதிகளில், இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை விமான நிலையத்தில்   ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னையில் ரூ. 31.87 இலட்சம் மதிப்பில் 621 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல்.

துபாயில் இருந்து ஏர் இந்தியா IX644 விமானத்தில் சென்னை வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஜஹபர் அலி அப்துல் வகாப் (49) மற்றும் சென்னையைச் சேர்ந்த தமீம் அன்சாரி சம்சுதீன் (28) ஆகியோரை விமான நிலைய சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பெயரில் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 733 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய இரண்டு பொட்டலங்கள் அவர்களது உள்ளாடையினுள் மறைத்து தைத்திருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரிடமிருந்தும் ரூ.31.87 இலட்சம் மதிப்பில் 621 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

அசாதுதீன் உவைசிக்கு ஆரம்பமே வெற்றி ….

அசாதுதீன் உவைசிக்கு ஆரம்பமே வெற்றி ….

இதயங்களை இணைப்போம் என்கிற பெயரில் சென்னையில் வருகின்ற 6 ம்தேதி திமுகவின் சிறுபான்மை அணி சார்பில் நடத்த இருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள அசாதுதீன் உவைசிக்கு அழைப்பு ...

திமுகவுக்கு தோல்வியை அளிக்கும் பிரசாந்த் கிஷோர் !

திமுகவுக்கு தோல்வியை அளிக்கும் பிரசாந்த் கிஷோர் !

பிரசாந்த் கிஷோருக்கு இப்பொழுது நே ரம் சரியில்லை என்றே நான் நினைக்கி றேன்.அதனால் தான் மேற்கு வங்காள த்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து வெளியேறும் எம்எல்ஏக்கள் அவரையே ...

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும் திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

உலகளாவிய வீட்டு வசதித் தொழில்நுட்பச் சவாலின் கீழ், ஆறு மாநிலங்களில் ஆறு இடங்களில் சிறிய நவீன வீடுகள் கட்டும் திட்டத்துக்கு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.  மலிவான, நிலையான வீட்டு வசதித் திட்டத்தின் ஊக்குவிப்பாளர் (ஆஷா-இந்தியா) திட்டத்தின் கீழ் வெற்றி பெற்றவர்களை அவர் அறிவித்தார் மற்றும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தை அமல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு அவர் ஆண்டு விருதுகளை வழங்கினார்.  இந்திய வீடுகளுக்கான  புதிய, மலிவான, சரிபார்க்கப்பட்ட, ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புத் தொழில்நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் படிப்பையும் (நவரித்) அவர் வெளியிட்டார். மத்திய அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, உத்தரப் பிரதேசம், திரிபுரா, ஜார்கண்ட், தமிழ்நாடு, குஜராத், ஆந்திரப்பிரதேசம், மற்றும் மத்தியப்பிரதேச மாநில முதல்வர்கள் இந்தக் காணொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,  புதிய தீர்வுகளை நிருபிக்க, புதிய சக்தியுடன் முன்னேறும் நாள் இது எனவும், ஏழைகள், நடுத்தர மக்களுக்கு வீடுகள் கட்ட புதிய தொழில்நுட்பத்தைப் பெறும் நாள் எனவும் கூறினார்.   தொழில்நுட்ப மொழியில், இந்த வீடுகள், சிறிய நவீன வீடுகள் திட்டம் என அழைக்கப்படுகிறது.  ஆனால் இந்த ஆறு திட்டங்களும் உண்மையிலேயே கலங்கரை விளக்கம் போல், நாட்டில் வீட்டு வசதித் துறைக்குப் புதிய திசையைக் காட்டும். இந்த சிறிய வீடுகள் திட்டம், தற்போதைய அரசின் அணுகுமுறைக்கு உதாரணமாக உள்ளன என பிரதமர் கூறினார்.  ஒரு காலத்தில் வீட்டு வசதித் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனவும், தரத்திலும், நுணுக்கத்திலும் கவனம் செலுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.  இன்று, திட்டங்களை விரைவாக முடிக்க, நாடு வேறு அணுகுமுறையைத் தேர்வு செய்து, மாற்று வழியையும், சிறந்த தொழில்நுட்பத்தையும் பின்பற்றுகிறது. அரசின் அமைச்சகங்கள் மந்தமான பெரிய அமைப்புகளாக இல்லாமல், புதிய நிறுவனங்கள் போல் தகுதியுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இத்திட்டத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட புதுமையான கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.  இந்த உலகளாவிய போட்டி, புதுமை மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் வளரும் வாய்ப்பை அளித்துள்ளது என அவர் கூறினார். இன்றிலிருந்து ஆறு வெவ்வேறான இடங்களில் இருந்து ஆறு சிறிய வீடுகள் கட்டும் திட்டம் தொடங்குகிறது என பிரதமர் கூறினார். இந்த சிறிய வீடுகள் திட்டம், நவீனத் தொழில்நுட்பம் மற்றும் புதுமை முறையால் உருவாக்கப்படும் எனவும், இது கட்டுமான காலத்தைக் குறைக்கும் எனவும், ஏழைகளுக்கு ஏற்ற வீடாகவும் இருக்கும் எனவும் பிரதமர் கூறினார். இந்த வீடுகளின் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் புதுமை இருக்கும் என அவர் கூறினார்.  உதாரணத்துக்கு, இந்தூரில் கட்டப்படும் வீடுகள் திட்டத்தில், செங்கல் மூலம் சுவர்கள் உருவாக்கப்படாது. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட சாண்ட்விச் இணைப்புகளாக அவை இருக்கும்.  ராஜ்கோட்டில் கட்டப்படும் சிறிய வீடுகள், பிரெஞ்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்படுகின்றன. அவை குகைத் தொழில்நுட்ப முறையில் கான்கிரீட் மூலம் உருவாக்கப்படும். இது பேரிடர்களைத் தாங்க கூடியதாக இருக்கும்.  சென்னையில், அமெரிக்க மற்றும் பின்லாந்து தொழில்நுட்பத்தில், கான்கிரீட் மூலம் முன்கூட்டிய தயாரிக்கப்பட்ட பாகங்களை இணைக்கும் முறையில் வீடுகள் விரைவாகவும், மலிவாகவும் கட்டப்படுகின்றன.   ராஞ்சியில் கட்டப்படும் வீடுகளில் ஜெர்மன் நாட்டின் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு அறையும், தனியாக உருவாக்கப்பட்டு, பொம்மை இணைப்பு வடிவங்களைச் சேர்ப்பது போல  ஒன்றாகச் சேர்க்கப்படும். அகர்தலாவில் கட்டப்படும் வீடுகள், நியூசிலாந்து தொழில்நுட்பத்தில் எஃகுச் சட்டங்களைப் பயன்படுத்திக் கட்டப்படும். இது பெரிய நிலநடுக்க அபாயத்தை தாங்க கூடியது. லக்னோவில் கனடா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பிளாஸ்டர் மற்றும் பெயின்ட் தேவை இல்லை. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சுவர்கள் மூலம் இந்த வீடுகள் விரைவாகக் கட்டப்படும்.  ஒவ்வொரு இடத்திலும் 12 மாதத்துக்குள் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும்.  ஒவ்வொரு இடமும் நமது திட்டத் தயாரிப்பாளர்கள், பொறியாளர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு புதிய தொழில்நுட்பத்தையும், அனுபவத்தையும் கற்கும் மையமாக இருக்கும்.  இத்துடன், கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பம் தொடர்பான திறனை மேம்படுத்த சான்றிதழ் படிப்பும் தொடங்கப்படும் எனவும்  அப்போது தான், வீடு கட்டுமானத் துறையில், உலகின் சிறந்த தொழில்நுட்பம் மற்றம் பொருள்கள் மக்களுக்குக் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.  நம்நாட்டில் நவீன வீட்டுவசதித் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க ஆஷா - இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது என பிரதமர் கூறினார். இதன் மூலம், 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய மற்றும் மலிவான கட்டிடத் தொழில்நுட்பம் நாட்டில் உருவாக்கப்படும். இந்தப் பிரசாரத்தின் கீழ், ஐந்து சிறந்த தொழில்நுட்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என அவர் கூறினார். நகரத்தில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மிகப் பெரிய கனவு சொந்த வீட்டில் வசிப்பதுதான் என அவர் கூறினார்.  ஆனால், பல ஆண்டுகளாக, சொந்த வீட்டின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வந்தனர். நம்பிக்கை ஏற்பட்டாலும், அதிக விலை காரணமாக , வீடு வாங்குவது குறைந்தது. சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்பதாலும், மக்கள் நம்பிக்கை இழந்தனர். வங்கியின் அதிக வட்டி, வீட்டுக் கடன் கிடைப்பதில் உள்ள சிரமம் ஆகியவை  வீடு வாங்கும் ஆர்வத்தை மேலும் குறைத்தன. சாதாரண மனிதரும் சொந்த வீடு பெற முடியும் என்ற நம்பிக்கையை கடந்த ஆறு ஆண்டுகளில் மீண்டும் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் திருப்தி அளிப்பதாக அவர் தெரிவித்தார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நகரங்களில், இலட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. புதுமை, உள்ளூர்த் தேவை, வீட்டு உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளை அமல்படுத்துவது ஆகியவற்றில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் கவனம் செலுத்தியது என பிரதமர் கூறினார். ஒவ்வொரு வீடும் மின்சாரம், தண்ணீர், கேஸ் இணைப்பு பெற்ற வீடாக உள்ளது.  ஜியோ-டேக்கிங் மற்றும் பயனாளிகளுக்கு நேரடிப் பணப்பரி மாற்றத்தின் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. நடுத்தர மக்களின் பலன்கள் குறித்து பேசிய பிரதமர் திரு மோடி, வீட்டுக் கடன்களுக்கு அவர்கள் ...

2020-ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கியமான செயல்பாடுகளில் சில…

2020-ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கியமான செயல்பாடுகளில் சில…

2020-ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கியமான செயல்பாடுகளில் சில வருமாறு: * நாட்டின் உயர் பாதுகாப்பு மேலாண்மையில் பெரிய சீர்திருத்தத்துடன் கூடிய முன்னோடி முடிவாக, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி என்ற நான்கு நட்சத்திர ஜெனரல் பதவியிடத்தை உருவாக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. * பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் 2020 ஜனவரி 1 அன்று பதவியேற்றார். பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள ராணுவ விவகாரங்கள் துறையின் தலைவராகவும், செயலாளராகவும் அவர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. * எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறல்கள் தடுக்கப்பட்டு, எண்ணற்ற தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. * கல்வான் பள்ளத்தாக்கைப் பாதுகாப்பதற்காக 20 வீரர்கள் தங்களது இன்னுயிர்களைத் தியாகம் செய்தனர். * எல்லைக்கோட்டில் தன்னிச்சையாக எந்த மாற்றத்தையும் செய்வது ஒப்புக் கொள்ளப்படாது என்று சீனாவிடம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. * தற்சார்பு இந்தியா இலட்சியத்தை எட்டும் முயற்சியாக, பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020 வெளியிடப்பட்டது. உள்நாட்டுத் தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கவும், பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பை எட்டவும் இது வெளியிடப்பட்டது.

திமுக vs சீமான் திராவிட அரசியலை வீழ்த்துமா தமிழ்த் தேசியம்?-

தமிழக அரசியலில் 100 ஆண்டுகளாக கோலோச்சி வரும் திராவிட அரசியல் முடிவுக்கு வரும் நேரம் நெருங்கி வருகி றது என்றே கூறலாம். இந்த தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படும் ...

பிரதமர் உழவர் உதவி நிதி திட்டம், உழவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

விவசாயிகள் 7-வது தவணையின் பணம் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால் புகார் செயலாம்!`

கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி, பிரதமர் மோடி தனது சொந்த கைகளால் 7 வது தவணைத் தொகையை விவசாயிகள் கணக்கிற்கு அனுப்பினார், உங்கள் கணக்கில் ரூ.2000 ...

பாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

பாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

இந்திய கிரக்கெட்அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இன்று பாஜக கட்சியில் இணைந்தார். கடந்த 1983-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் அறிமுகமானவர் ...

இலவச ரேஷன் கார்டை திட்டம் விண்ணப்ப படிவம்: உங்கள் கார்டை இலவசமாகப் பெறுங்கள்

இலவச ரேஷன் கார்டை திட்டம் விண்ணப்ப படிவம்: உங்கள் கார்டை இலவசமாகப் பெறுங்கள்

அரசு வழங்கிய ரேஷன் கார்டு ஒரு முக்கியமான அதிகாரப்பூர்வ ஆவணம். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பொது விநியோக முறை (PDS) மூலம் மானிய ...

Page 122 of 126 1 121 122 123 126

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x