Tag: NEWS

மோடி அரசு மக்கள் நலனை காக்க ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் விலை 54 சதவீதம் வரை குறைப்பு.

79ஆவது மனதின் குரல் பிரதமர் மோடியின் உரை.

எனதருமை நாட்டுமக்களே,      இரண்டு நாட்கள் முன்பாக, சில அற்புதமான காட்சிகள், நினைவினை விட்டு நீங்கா சில நினைவுகள்….. இவை இப்பொழுதும் என் கண்களின் முன்பாக நிழலாடுகின்றன.  ...

மதுரை மல்லி மற்றும் இதர பாரம்பரிய மலர்கள், தமிழகத்திலிருந்து துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி.

மதுரை மல்லி மற்றும் இதர பாரம்பரிய மலர்கள், தமிழகத்திலிருந்து துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது இல்லங்களிலும் கோவில்களிலும் மலர்களால் அலங்காரம் செய்வதற்கு ஏதுவாக புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள மதுரை மல்லி மற்றும் பட்டன் ரோஜா, அல்லி, சாமந்தி, மேரிகோல்டு போன்ற இதர பாரம்பரிய பூக்கள்  தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா மற்றும் துபாய்க்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. நிலக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கோயம்பத்தூரைச் சேர்ந்த வேன்கார்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த பூக்களைப் பெற்றது. மலர்கள், நீண்ட நாட்கள் வாடாமல் இருப்பதற்காகத் தகுந்த தொழில்நுட்பத்துடன் கூடிய பேக்கேஜிங் முறையை வழங்கி, ஏற்றுமதியாளர்களுக்கு கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மலர் வளர்ப்புத் துறை ஆதரவளித்தது. தரமான மலர்களைப் பெறுவதற்காக ஏற்றுமதியாளர்கள் விவசாயிகளுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தினர். இதன் மூலம் 130 பெண் தொழிலாளர்களுக்கும், 30 திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டது. இந்த ஏற்றுமதி சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட பிறகு, துபாய் மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினர், நறுமணம் கமழும் மலர்களை பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களின்  போது தங்களது இல்லங்களில் உள்ள இறைவனுக்கும் ஆலயங்களிலும் பயன்படுத்த உதவிகரமாக இருக்கும். 2020-21-ஆம் ஆண்டில் ரூ. 66.28 கோடி மதிப்பிலான மல்லிகை பூக்கள் மற்றும் பூங்கொத்துகள் (மல்லிகை மற்றும் இதர பாரம்பரிய மலர்களை உள்ளடக்கியது) அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் ரூ. 11.24 கோடி மதிப்பிலான மலர்கள் சென்னை, கோயம்பத்தூர், மதுரை விமான நிலையங்கள் வாயிலாக தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகெங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற மலர்களுள் மதுரை மல்லிகையும் ஒன்று. அதன் நறுமணம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பேரழகுக்கு இணையான  புகழைப் பெற்றது. மல்லிகையின் முக்கிய சந்தையாக உருவாகியுள்ள மதுரை, இந்தியாவின் ‘மல்லிகை தலைநகரமாகவும்' வளர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: தினசரி தொற்று எண்ணிக்கை 42,766 ஆக பதிவு

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 37 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 48,04,423 முகாம்களில் 37,21,96,268 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,55,802 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 13-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,55,033 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.48 சதவீதமாகும். இதுவரை மொத்தம் 2,99,33,538 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 45,254 பேர் குணமடைந்தனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,55,225 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 42,90,41,970 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.34 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.19 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 19 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு குறைவாகவும், 33 நாட்களாக 5 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த எல் முருகன் மத்திய இணை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றது தொடர்ந்து ...

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் நேரடி முகவர்களைக் குழுவில் சேர்ப்பது/ ஈடுபடுத்துவதற்கான நேர்முகத் தேர்வு 09.07.2021 அன்று அசோக் நகர் அஞ்சல் அலுவலகத்தில் (உதயம் திரையரங்கிற்கு ...

கடலோர பகுதியில், ஜூலை 9-ம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு.

கடலோர பகுதியில், ஜூலை 9-ம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு.

அரபிக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைவதன் காரணமாக, மேற்கு கடலோர பகுதியில் ஜூலை 9-ம் தேதி முதல், மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொங்கன் மற்றும் கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே ...

இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை.

இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை.

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 36 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 47,07,778 முகாம்களில் ...

கொரோனாவால் பலி இல்லை என்றால் தான் கோவில்கள் திறக்கப்படுமாம்! அமைச்சர் சேகர் பாபு!

கொரோனாவால் பலி இல்லை என்றால் தான் கோவில்கள் திறக்கப்படுமாம்! அமைச்சர் சேகர் பாபு!

செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த இந்து அறநிலைய துறை அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படாத நிலை உருவாகும் போது பக்தா்களின் தரிசனத்துக்காக கோயில்கள் திறக்கப்படும் ...

தி.மு.க அரசிற்கு எதிராக பாஜகவை தொடர்ந்து களத்தில் இறங்கும் பாமக.

தி.மு.க அரசிற்கு எதிராக பாஜகவை தொடர்ந்து களத்தில் இறங்கும் பாமக.

கடந்த திங்கள் அன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடை திமுக அரசால் திறக்கப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக சார்பில் நிர்வாகிகள் அவர் அவரது ...

தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.3,691 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு.

தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.3,691 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு.

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க மத்திய அரசு  ரூ.3,691 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டில் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை ரூ.3,691 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.921.99 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=xXYdslnBULA ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய ஜல் ஜீவன் திட்டம் தமிழகத்துக்கு முதல் தவணையாக ரூ.614.35 கோடியை வழங்கியுள்ளது. தமிழகத்துக்கு ஜல்ஜீவன் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை 4 மடங்கு உயர்த்த ஒப்புதல் அளித்துள்ள ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங், 2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழகத்துக்கு முழு உதவியும் அளிக்கப்டும் என உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.26 வீடுகளில், 40.36 லட்சம் வீடுகளுக்கு (31.80 சதவீதம்) குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்த திட்டம் தொடங்கியபோது, 21.65 லட்சம் (17.06 சதவீதம்) வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கடந்த 22 மாதங்களில் 18.70 லட்சம் (14.74 சதவீதம்) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இன்னும் 86.53 லட்சம் வீடுகள்  குடிநீர் குழாய் இணைப்பு இல்லாமல் உள்ளன. இந்தாண்டில் 16.13 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மீதமுள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது மிகப் பெரிய பணியாக இருக்கும். 2024ம் ஆண்டுக்குள் இந்தப் பணியை முடிக்க, கிராமங்கங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதை தமிழகம் 179 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இந்தாண்டுக்கான செயல் திட்டத்தை தமிழகம் இன்னும் இறுதி செய்யவில்லை. இதை தாமதிக்காமல் இறுதி செய்யும்படி தமிழக அரசை தேசிய ஜல்ஜீவன் திட்டம் கேட்டுக் கொண்டுள்ளது. https://www.youtube.com/watch?v=zMIbWl1xLhM ஜல்ஜீவன் திட்டம் அமல்படுத்தும் பணியை விரைவுபடுத்தும்படி தமிழக முதல்வருக்கு, ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார். 2020-21ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய ரூ.921.99 கோடியில், தமிழகம் ரூ.544.51 கோடியை மட்டும் பயன்படுத்தியது. ரூ.377.48 கோடியை திருப்பி அளித்தது. இந்தாண்டு 4 மடங்கு அதிகமாக ரூ.3,691 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செலவழிக்காத நிலுவைத் தொகையாக ரூ.377.48 கோடி உள்ளது. 2020-21ம் ஆண்டில்  மாநிலத்தின் பங்களிப்பு பற்றாக்குறையாக ரூ. 290.79 கோடி உள்ளது. 2021-22ம் ஆண்டில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழகத்துக்கு ரூ.8,428.17 கோடி உள்ளது. ஆகையால், இத்திட்டத்துக்கு பணப் பற்றாக்குறை எதுவும் இல்லை. தமிழக முதல்வருக்கு, மத்திய அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் மூலம், கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தமிழகத்தால் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2021-22ம் ஆண்டில், 15வது நிதி ஆணையத்தின் மானியமாக ஊரக உள்ளாட்சி பகுதிகளில் குடிநீர் மற்றும் துப்புரவு பணிக்கு ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.8,436 கோடி உறுதி அளிக்கப்பட்ட நிதி உள்ளது. தமிழக கிராம பகுதிகளில் செய்யப்படும் இந்த மிகப் பெரிய முதலீடு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, கிராம பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். ...

Page 148 of 168 1 147 148 149 168

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x