Tag: NEWS

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய இந்திய ராணுவ முடிவு.

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய இந்திய ராணுவ முடிவு.

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் மற்றும் கன்டெய்னர்களை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய ராணுவ மருத்துவ சேவைகள் அமைப்பு (AFMS) முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொவிட் 2வது அலையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிற இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான 23, ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், ஜெர்மனியிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு ராணுவ மருத்துவமனைகளில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும். ஒவ்வொரு கருவியும், நிமிடத்துக்கு 40 லிட்டர், ஒரு மணிக்கு 2,400 லிட்டர்கள் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. இவற்றின் மூலம் 20 முதல் 25 நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் கொடுக்க முடியும். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இதை எளிதாக பிற இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இந்த ஆக்ஸிஜன் கருவிகள் ஒரு வாரத்துக்குள் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது அதிகரித்துள்ள மருத்துவ தேவையை சமாளிக்க, ராணுவ மருத்துவமனைகளில் குறைந்த கால பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு, 2021 டிசம்பர் 31ம் தேதி வரை பணிக்கால நீட்டிப்பை வழங்க பாதுகாப்புத்துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது.  இதன் மூலம் 238 மருத்துவர்களுடன் ராணுவ மருத்துவ சேவைகளின் பலம் அதிகரிக்கும்.

வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவேண்டும்  பிரதமர் மோடி.

வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவேண்டும் பிரதமர் மோடி.

நாடு முழுவதும் உள்ள முன்னணி ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.  இது சவால்களை சந்திக்கும் நேரம் மட்டும் அல்ல குறுகிய காலத்தில் தீர்வுகளை வழங்க வேண்டிய காலம் என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். அரசு மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள் இடையே நல்ல ஒருங்கிணைப்பை பராமரிக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். கடந்த சில வாரங்களாக உற்பத்தியை அதிகரித்ததற்காக ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களை பிரதமர் பாராட்டினார். திரவ ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அவர்  ஆமோதித்தார். நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள, தொழிற்சாலை ஆக்ஸிஜனை மாற்றிவிட்டதற்காக ஆக்ஸிஜன் தொழில்துறையினருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். நிலைமையை மேம்படுத்த, வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்துவது குறித்தும் பிரதமர்  பேசினார். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதை அதிகரிக்க வேண்டும் அதேபோல் ஆக்ஸிஜன் போக்குவரத்துக்கான வசதியையும் மேம்படுத்த வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.  ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு, இதர  கேஸ் டேங்கர்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்  ஆக்ஸிஜன் தொழில்துறையினரை வலியுறுத்தினார். மாநிலங்களின் ஆக்ஸிஜன் தேவையை கருத்தில் கொண்டு, காலி ஆக்ஸிஜன் டேங்கர்களை உற்பத்தி மையங்களுக்கு விரைவாக கொண்டு செல்ல ரயில்வே மற்றும் விமானப்படையை திறம்பட பயன்படுத்துவது பற்றி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கூறினார். மத்திய அரசு, மாநிலங்கள், ஆக்ஸிஜன் தொழில் துறையினர், போக்குவரத்து உரிமையாளர்கள், மருத்துவமனைகள் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என  பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். சிறந்த கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் தான், இந்த சவாலை எளிதில் எதிர்கொள்ள முடியும். ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களை பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர்களுக்கு அரசு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். விரைவில் இந்த நெருக்கடியை நாடு வெற்றிகரமாக முறியடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைமை நிர்வாக இயக்குனர் திரு முகேஷ் அம்பானி, செயில் தலைவர் திருமதி சோமா மண்டல்,  ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் திரு சாஜன் ஜிந்தால், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் திரு நரேந்திரன், ஜேஎஸ்பிஎல் நிறுவனத்தின் திரு நவீன் ஜிந்தால், ஏஎம்என்எஸ் நிறுவனத்தின் திரு திலீப் ஓமன், லிண்டே நிறுவனத்தின் திரு எம் பானர்ஜி, ஐனாக்ஸ் நிறுவனத்தின் திரு சித்தார்த் ஜெயின், ஜாம்ஷெட்பூர் ஏர் வாட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு நொரியோ சிபுயா  நேஷனல் ஆக்ஸிஜன் லிமிடெட் நிறுவனத்தின் திரு ராஜேஷ் குமார் சரப்,  அகில இந்திய தொழிற்சாலை வாயுக்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் திரு சாகெட் திகு ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

இந்தியாவின் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது! வெளியான புதிய தகவல்.!

தடுப்பூசி போட்டுக் கொள்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகத்து கொண்டிருகிறது என்பதே நிம்மதியான விசயம்தான்… தடுப்பூசி போட்டு கொள்வதை தள்ளிப்போடுவது என்பது ஆபத்தை விலைக்கு வாங்குவது போல்தான் ...

தோனியின் சூட்சமம் என்னை வியக்க வைத்தது கம்பீர் புகழாரம்.

தோனியின் சூட்சமம் என்னை வியக்க வைத்தது தோனிக்கு கம்பீர் புகழாரம். ஐபிஎல் 2021, போட்டிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதிலும் சென்னை அணி பழைய சென்னை அணியாக ...

10 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியது மத்திய அரசு!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உயிரிழப்பும் சற்று அதிமாகி வருகிறது. ...

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுகிறதா! 500 டன் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக அரசுக்கு வழங்க தயார்.

ஒரு நாளைக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக அரசுக்கு வழங்க தயார்."ஸ்டெர்லைட் நிறுவனம்" இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால், கொரோனா ...

சிறப்பான ரிப்போர்ட் வந்ததால் பாராட்டிய அமித்ஷா குஷியில் முதல்வர்.

சிறப்பான ரிப்போர்ட் வந்ததால் பாராட்டிய அமித்ஷா குஷியில் முதல்வர்.

தமிழகத்தில் 234 தொகுதிக்கும் சட்டமன்ற தேர்தல் ஒரேகட்டமாக கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அனைத்து தொகுதிகளுக்கும் 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற மே 2-ம் தேதி வாக்கு என்னப்படுகின்றது ...

Thirumavalavan

என்ன செய்வார் திருமா ? ஒரு ஆணுக்கு ’பாலியல்’ தொல்லை கொடுத்தாரா, வி.சி.க செய்தித் தொடர்பாளர்..?

குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று. தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்யும் சேட்டைகள், தவறுகளை, கண்டிக்காமல். பா.ஜ.க, மோடி, மத்திய அரசு, மீது தொடர்ந்து ...

அட்டராசிட்டி தேங்காய் நார் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்த தி.மு.கவினர்.

அட்டராசிட்டி தேங்காய் நார் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்த தி.மு.கவினர்.

கடலூர் மாவட்டம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் தொகுதிக்கான வாக்குப் பெட்டிகளை துணை ராணுவம்,போலீஸ் பலத்த பாதுகாப்புடன் விருத்தாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் ...

Page 175 of 189 1 174 175 176 189

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x