Tag: news18

ஜிஎஸ்டி இழப்பீடு தொகை: மாநிலங்களுக்கு 14-வது தவணையாக ரூ.6,000 கோடியை வழங்கியது மத்திய அரசு

ஜிஎஸ்டி இழப்பீடு தொகை: மாநிலங்களுக்கு 14-வது தவணையாக ரூ.6,000 கோடியை வழங்கியது மத்திய அரசு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய,  14-வது வாரத் தவணையாக ரூ.6,000 கோடியை மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை விடுவித்துள்ளது. இவற்றில் ரூ.5,516.60 கோடி  ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக உள்ள 23 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.483.40 கோடி சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன (தில்லி, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி).  மீதமுள்ள 5 மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை. https://www.youtube.com/watch?v=6Kmg8vHDiAU தற்போது, 76 சதவீத ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ரூ.76,616.16 கோடி மாநிலங்களுக்கும், ரூ.7,383.84 கோடி, சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி முறையை அமல்படுத்தியதால் ரூ.1.10 லட்சம் கோடி அளவிலான வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக,  மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பில் சிறப்பு சாளரம் ஒன்றின் மூலம் கடன் உதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பாக இந்த சிறப்பு சாளரத்தின் வாயிலாக இந்திய அரசு கடன்களைப் பெறுகிறது. 2020 அக்டோபர் 23-ஆம் தேதி முதல் இதுவரை 14 கட்டங்களாக கடன்கள்  பெறப்பட்டுள்ளன. தமிழகம், பிப்ரவரி 1-ம் தேதி வரை, மாநில மொத்த உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு அதாவது ரூ.9,627 கோடியை சிறப்பு கடன் சாளரத்தின் கீழ்  பெறவும், சிறப்பு ஏற்பாட்டின் மூலம் ரூ.5229.92 கோடி திரட்டவும்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரூ.565.54 கோடி கடன் கூடுதலாகப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உற்பத்தி, வர்த்தகம் மற்றும் இதர துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியை பட்ஜெட் அதிகரிக்கும்: வர்த்தக செயலாளர் டாக்டர்.

உற்பத்தி, வர்த்தகம் மற்றும் இதர துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியை பட்ஜெட் அதிகரிக்கும்: வர்த்தக செயலாளர் டாக்டர்.

இந்தியாவின் ஒட்டுமொத்த போட்டித்திறன் மற்றும் உற்பத்தி திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் குறித்த விரிவான அறிவிப்புகள், 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக மத்திய வர்த்தக தொழில் அமைச்சகத்தின் வர்த்தக துறைச் செயலாளர் டாக்டர் அனூப் வாத்வான் கூறியுள்ளார். இவற்றின் மூலம் இந்தியாவின் ஏற்றுமதிகளில் வளர்ச்சி, பன்முகத்தன்மை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒப்புதல்கள் பெறுவதையும், நடைமுறைகளையும் எளிமையாக்கி வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல், முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளை உருவாக்கி முதலீட்டுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துதல் ஆகிய இரண்டையும் இவை பூர்த்தி செய்கின்றன. 2021-22 பட்ஜெட் முன்னெடுப்புகள் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், துடிப்பான உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து, பயன்பாடுகளுக்கான சூழ்நிலையை உற்பத்தி துறைக்கு ஏற்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். ஜவுளித்துறையில் சர்வதேச வெற்றியாளர்களை உருவாக்கி அத்துறையை வளர்ச்சியடைய செய்வதற்கான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை நிறுவக்கூடிய திட்டமான மிகப்பெரிய முதலீடுகளுடனான ஜவுளிப் பூங்காக்கள் (மித்ரா) இந்த நடவடிக்கைகளில் ஒன்று அவர் கூறினார். அடுத்த மூன்று வருடங்களில் ஏழு ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்படும். மேலும் பேசிய அவர், கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், பெதுவாகாட் ஆகிய ஐந்து முக்கிய மீன்பிடி துறைமுகங்களில் நவீன மீன்பிடி துறைமுகங்களையும், மீன் மையங்களையும் உருவாக்குவதற்கான குறிப்பிடத்தகுந்த முதலீடுகள், தமிழ்நாட்டில் பல்முனை கடற்பாசி பூங்கா ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜவுளி மற்றும் கடல்சார்ந்த துறைகளில் ஏற்றுமதிகளின் வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கைகள் ஊக்கமளிக்கும்.

Postmortem Report டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை.

Postmortem Report டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை.

குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்து விட்டது. அவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை என்பது இதில் தெளிவாகியுள்ளது. ...

விவசாயத்துறையை வளம் மிக்கதாகவும், வேலைவாய்ப்புகளை கொண்டதாகவும் ஆக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை மிகவும் உதவியாக இருக்கும்.

விவசாயத்துறையை வளம் மிக்கதாகவும், வேலைவாய்ப்புகளை கொண்டதாகவும் ஆக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை மிகவும் உதவியாக இருக்கும்.

விவசாயத்துறையை வளம் மிக்கதாகவும், வேலைவாய்ப்புகளை கொண்டதாகவும் ஆக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை மிகவும் உதவியாக இருக்கும் என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு சங்கத்தின் 92-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர், வேளாண் ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை பாராட்டினார். வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு பலன் அளிப்பதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சர் பேசினார். மத்திய ரயில்வே, வர்த்தகம், தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் இதில் பங்கேற்றனர். -----

டில்லி போராட்ட த்திலிருந்து 2 விவசாய சங்கங்கள் வாபஸ்.

டில்லி போராட்ட த்திலிருந்து 2 விவசாய சங்கங்கள் வாபஸ்.

டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் இரு விவசாய சங்கங்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன.மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில், 40க்கும் ...

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

விவசாயிகள் வருமானத்தை இரட்டிபாக்குவதே மோடி அரசின் குறிக்கோள்: அமித்ஷா

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மோடி அரசின் முக்கிய குறிக்கோள் என்றும் புதிய வேளாண் சட்டங்கள் இதற்கு வழிவகுக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். ...

உதயநிதிக்கு முன்னுரிமையா? முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய ஸ்டாலின்!

உதயநிதிக்கு முன்னுரிமையா? முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய ஸ்டாலின்!

தேனி மாவட்டம் போடியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், கூட்டணி கட்சிகளை உதயசூரியன் ...

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உணவு தானியங்களின் கொள்முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது உணவு தானியங்களின் கொள்முதல்.

காரீப் 2020-21 பருவத்தில், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பிகார், ஜார்க்கண்ட், அசாம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்தில் கடந்த 19.01.2021 வரை, 572.32 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு, இதே காலத்தின் கொள்முதலை ...

சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் தேசிய சூரிய மின்சக்தி நிறுவனமும், உஸ்பெகிஸ்தானின் சர்வதேச சூரிய மின்சக்தி நிறுவனமும் •        சூரிய ஒளிமின்னழுத்தம் •        சேமிப்பதற்கான தொழில்நுட்பங்கள் •        தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி/ செயல் விளக்கம்/ சோதனைத் திட்டங்களைக் கண்டறிவது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். இரு நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில், சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் உறுப்பு நாடுகளில் சோதனை முயற்சியில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு இருதரப்பும் பணியாற்றும்.

இந்த தேர்தலில் எம்ஜிஆர் முக்கியமான பேச்சாக வந்ததன் காரணம் என்ன ?

எம்.ஜி.ஆர் ஆட்சியை மக்களுக்கு கொடுப்பேன் ரஜினிகாந்த். கருப்பு எம்ஜிஆர். விஜயகாந்த். எம்.ஜி.ஆர் மறு உருவம்தான் நான்.கமல்ஹாசன். எம்.ஜி.ஆரின் பரம ரசிகன் நான்.மு.க.ஸ்டாலின். இந்தத் தேர்தல் எம்.ஜி.ஆர் முக்கிய ...

Page 20 of 25 1 19 20 21 25

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x