பேஸ்புக்-ல் ஆபாச படங்களை பதவிட்ட திமுக நிர்வாகிகள் கைது…
பியூட்டி பார்லரில் பெண்களைத் தாக்குவது, நில அபகரிப்பு, கள்ளத் துப்பாக்கி, தோட்டாக்கள் தயாரிப்பது என பல்வேறு சமூக விரோத குற்ற செயல்களில் தொடர்புடைய திமுகவினர் மீது, பேஸ்புக்-ல் ஆபாச ...
பியூட்டி பார்லரில் பெண்களைத் தாக்குவது, நில அபகரிப்பு, கள்ளத் துப்பாக்கி, தோட்டாக்கள் தயாரிப்பது என பல்வேறு சமூக விரோத குற்ற செயல்களில் தொடர்புடைய திமுகவினர் மீது, பேஸ்புக்-ல் ஆபாச ...
ரசிகர்களுக்காக உருக்கமான வீடியோ ஒன்றை அக்ஷய்குமார் வெளியிட்டுள்ளார். இதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எதற்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராமாயண ...
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மோடி அரசின் முக்கிய குறிக்கோள் என்றும் புதிய வேளாண் சட்டங்கள் இதற்கு வழிவகுக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். ...
ராகுல்காந்தியை அதிகம் ஆதரிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகுக்கிறது. ராகுல்காந்தி 46% மோடி 28% மக்கள் ஆதரிக்கின்றனர் என சிவோட்டர் செய்தி ஸ்தாபனம் வெளியிட்டுள்ளதை சன் நீயுஸ் ...
சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் கடத்தி வந்த ரூ.36.52 லட்சம் மதிப்பிலான 722 கிராம் தங்கம், சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். உளவுத் தகவல் அடிப்படையில், துபாயிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் சங்கர் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் 836 கிராம் தங்கப் பசையை, 3 பொட்டலங்களாக ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தார். அதிலிருந்து 722 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.36.52 லட்சம். இதையடுத்து மணிகண்டன் சங்கர் கைது செய்யப்பட்டதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
திமுகவில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லை என்றும், எது கிடைத்தாலும் சுருட்ட நினைக்கிற திமுக உள்ளதாக நடிகை விந்தியா விமர்சித்துள்ளார். கோவை, பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு ...
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு நேற்று தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர், சி.டி.ரவி முற்றுப்புள்ளி வைத்தார். தமிழகத்தில், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., ...
இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நடந்தது. இந்த விழாவில் தேசியளவில் வெற்றி பெற்ற மூன்று இளம் வெற்றியாளர்களின் கருத்துக்களை பிரதமர் கேட்டார். மக்களவைத் தலைவர், மத்திய கல்வி அமைச்சர், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்த பிரதமர், காலம் கடந்தாலும் கூட சுவாமி விவேகானந்தரின் தாக்கமும், ஈர்ப்பும் நமது தேசிய வாழ்க்கையில் அப்படியே மாறாமல் உள்ளன என்றார். தேசிய வாதம் மற்றும் நாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அவரது கருத்துக்கள், மக்களுக்கும், உலகத்துக்கும் சேவை செய்வதில் அவர் ஆற்றிய போதனைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பு பற்றி பிரதமர் பேசினார். தனிநபர்கள் சுவாமி விவேகானந்தரை தொடர்பு கொண்டனர் மற்றும் நிறுவனங்களை உருவாக்கினர். பதிலுக்கு, அவை புதிய நிறுவன மேம்பாட்டாளர்களை உருவாக்கியது. இந்த நடைமுறை, தனிநபர் வளர்ச்சி, நிறுவன மேம்பாட்டை ஏற்படுத்தும் நல்ல சுழற்சியைத் தொடங்கியது. தனிதொழில் முனைவோர் மற்றும் சிறந்த நிறுவனங்கள் இடையேயான தொடர்பை பிரதமர் எடுத்து கூறியதுபோல், இதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலம். அண்மையில் புதிய கல்வி கொள்கை வழங்கிய வசதி மற்றும் புத்தாக்க கற்றல் முறைகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். நாட்டில் நல்ல சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க நாம் முயற்சிக்கிறோம். இது இல்லாதததால்தான், இளைஞர்கள் வெளிநாடு செல்ல நேரிடுகிறது என பிரதமர் கூறினார். https://www.youtube.com/watch?v=BAmDbd0n0BQ நம்பிக்கையான, தெளிவான, அச்சமற்ற, தைரியமான இளைஞர்களை நாட்டின் அடித்தளமாக சுவாமி விவேகானந்தர்தான் அங்கீகரித்தார் என பிரதமர் வலியறுத்தி கூறினார். இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் கூறிய மந்திரங்களை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். உடல் தகுதிக்கு, இரும்பு தசைகளும், எஃகு நரம்புகளும் தேவை; ஆளுமை வளர்ச்சிக்கு தன்னம்பிக்கை தேவை; தலைமைப் பண்புக்கும், குழுப் பணிக்கும் அனைவரையும் நம்ப வேண்டும் என சுவாமி விவேகானந்தர் கூறினார். அரசியலில் இளைஞர்கள் தன்னலமற்ற மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்க வேண்டும் என பிரதமர் அறிவுரை கூறினார். நேர்மையற்ற செயல்பாடுகளின் தளம்தான் அரசியல் என்ற பழைய கருத்து மாறி, இன்று நேர்மையானவர்களுக்கும் பொது சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது என அவர் கூறினார். நேர்மையும், செயல்பாடும்தான் இன்றைய தேவை. வாரிசு அரசியலால் ஏற்படும் தீங்குகளையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். ஊழல் மக்களுக்கு சுமையாக மாறிவிட்டது என அவர் கூறினார். வாரிசு அரசியல் முறையை ஒழிக்க வேண்டும் என அவர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஜனநாயக அமைப்பில் வாரிசு அரசியல், திறமையின்மைக்கும், சர்வாதிகாரத்துக்கும் வழிவகுக்கிறது. இது போன்ற நபர்கள், குடும்ப அரசியல், அரசியலில் குடும்பம் என்ற நிலையை ஏற்படுத்துகின்றனர். ‘‘வம்சாவழி பெயர் மூலம் தேர்தலில் வெற்றி பெறும் காலம் எல்லாம் தற்போது முடிந்து விட்டது. வாரிசு அரசியல் நோய் இன்னும் ஒழியவில்லை.... வாரிசு அரசியல், நாட்டை முன்னேற்றாமல், தன்னையும் குடும்பத்தையும்தான் வளர்க்கிறது. இந்தியாவில் சமூக ஊழலுக்கு இதுதான் முக்கிய காரணம்’’ என பிரதமர் கூறினார். புஜ் நிலநடுக்கத்துக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளை உதாரணமாகக் கூறிய பிரதமர், பேரழிவில் தங்கள் சொந்த பாதையை உருவாக்க கற்றுக்கொள்ளும் சமூகம், தங்கள் விதியை எழுதுகிறது. அதனால்தான், 130 கோடி இந்தியர்களும் தங்கள் சொந்த விதியை இன்று எழுதுகின்றனர். இன்றைய இளைஞர்களின் ஒவ்வொரு முயற்சியும், புத்தாக்கமும், நேர்மையும் நமது நாட்டின் எதிர்காலத்துக்கு வலுவான அடித்தளம் அமைக்கிறது என பிரதமர் கூறினார்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர், அதாவது 2016 ஜனவரி 13 அன்று, இந்திய விவசாயிகளின் பயிர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை கையாளும் முறையை வலுப்படுத்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவொன்றை எடுத்த மத்திய அரசு, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, குறைவான, ஒரே மாதிரியான கட்டணத்தில் விரிவான காப்பீட்டுத் தீர்வை அளிக்கும் மைல்கல் நடவடிக்கையாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. https://www.youtube.com/watch?v=rLduNz3H-HE விவசாயிகளின் பங்குத் தொகைக்கு அதிகமான காப்பீட்டு கட்டணம் மாநில அரசாலும், மத்திய அரசாலும் சமமாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் இந்தத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு 90 சதவீத கட்டண மானியத்தை ஏற்கிறது. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு முன் இருந்த சராசரி காப்பீட்டு தொகையான ஒரு ஹெக்டேருக்கு ரூ.15,100 என்பது, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.40,700 ஆக உயர்த்தப்பட்டது. 2019 கரீப் பருவத்தில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வறண்ட சூழல் நிலவிய போது ரூ 500 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகள் உள்ளிட்டவை இத்திட்டத்தின் குறிப்பிடத்தக்க உதாரணங்கள் ஆகும். ஒரு வருடத்தில் 5.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இது வரை, இந்தத் திட்டத்தின் கிழ் ரூ 90,000 கோடிக்கும் அதிகமான காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பின் மூலம் காப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கே விரைவாகச் செலுத்தப்படுகிறது. கொவிட் பொதுமுடக்க காலத்தில் கூட ரூ 8,741.30 கோடி காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்ட நிலையில், சுமார் 70 லட்சம் விவசாயிகள் பலனடைந்தனர்.
அரசியலில் தன்னலமற்ற, ஆக்கபூர்வமான பங்களிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ‘‘மற்ற துறையைப் போல், அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய துறை அரசியல், இதில் இளைஞர்கள் பங்கேற்பது முக்கியமானது’’ என கூறினார். https://www.youtube.com/watch?v=pmLlhQg05rs ‘‘நேர்மையற்ற செயல்பாடுகளின் தளம்தான் அரசியல் என்ற பழைய கருத்து மாறி, இன்று நேர்மையானவர்களுக்கும் பொது சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது” என்று இளைஞர்களுக்கு பிரதமர் உறுதி அளித்தார். நேர்மையும், செயல்பாடும்தான் இன்றைய தேவை. வாரிசு அரசியலால் ஏற்படும் தீங்குகளையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். ஊழலை சந்தித்து வந்த மக்களுக்கு, அது சுமையாக மாறிவிட்டது என அவர் கூறினார். குடும்பத் தொடர்பை விட நேர்மைக்குத்தான் நாடு முன்னுரிமை அளிக்கிறது என்றும், நல்ல பணிகள்தான் முக்கியம் என்பதை வேட்பாளர்களும் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். வாரிசு அரசியல் முறையை ஒழிக்க வேண்டும் என அவர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். குடும்ப அரசியல், அரசியலில் குடும்பம் என்பதைக் காப்பதற்காக வாரிசு அரசியல்வாதிகள் செயல்படுவதால், ஜனநாயக அமைப்பில் வாரிசு அரசியல், திறமையின்மைக்கும், சர்வாதிகாரத்துக்கும் வழிவகுக்கிறது. ‘‘வம்சாவழி பெயர் மூலம் தேர்தலில் வெற்றி பெறும் காலம் எல்லாம் தற்போது முடிந்து விட்டது. வாரிசு அரசியல் நோய் இன்னும் ஒழியவில்லை.... வாரிசு அரசியல், நாட்டை முன்னேற்றாமல், தன்னையும் குடும்பத்தையும்தான் வளர்க்கிறது. இந்தியாவில் சமூக ஊழலுக்கு இதுதான் முக்கிய காரணம்’’ என பிரதமர் கூறினார். அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்றும், அவர்களின் வருகை வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் என பிரதமர் அறிவுரை கூறினார். ‘‘ நமது ஜனநாயகத்தை காக்க, நீங்கள் அரசியலில் சேர்வது அவசியம். சுவாமி விவேகானந்தர் உங்களுக்கு வழிகாட்டியாக உள்ளார். அவரது உத்வேகத்துடன், நமது இளைஞர்கள் அரசியலில் சேர்ந்தால், நாடு பலப்படும்’’ என திரு நரேந்திர மோடி கூறினார். ஆனால் இதுவோ தமிழக அரசியலில் வாரிசு அரசியலை தொன்று தொட்டு ...