Tag: onlinetamilnews

12 வயது சிறுமியிடம் சில்மிஷம்… ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கிறிஸ்தவ பாதிரியார் கைது.

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கிறிஸ்தவ பாதிரியார் கிறிஸ்துதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிறிஸ்தவ மத போதனை என்று கூறிக்கொண்டு பாலியல் ...

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

தபால் ஆயுள் காப்பீடு பாலிசி நேரடி முகவர்களுக்கான நேர்க்காணல்.

தபால் ஆயுள் காப்பீடு / ஊரக தபால் ஆயுள் காப்பீடு பாலிசிகளை விற்பதற்காக குழு அமைப்பதற்கு / நேரடி முகவர்களை ஈடுபடுத்துவதற்கு நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  கீழ்கண்ட ...

காஷ்மீரில் பாஜக தலைவர் வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்!  பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!  5 பேர் காயம்.

காஷ்மீரில் பாஜக தலைவர் வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை! 5 பேர் காயம்.

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாரதீய ஜனதா தலைவர் ஜஸ்பீர் சிங் வீட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். காஷ்மீரின் ...

தலைவன் வேறரகம் ஆபரேஷன் லாங்டா: உபியில் 3,300 என்கவுண்டர்  செய்து யோகி அரசு அதிரடி .

தலைவன் வேறரகம் ஆபரேஷன் லாங்டா: உபியில் 3,300 என்கவுண்டர் செய்து யோகி அரசு அதிரடி .

உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகிஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்ததிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் செய்துவருகின்றது.அதேபோல் தற்பொழுதும் ஒரு தரமான செயலை செய்துள்ளது. கொள்ளை மற்றும் கொலையில் ...

மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

தரமான சம்பவம் செய்த யோகி அரசு.

உதிர்ப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகிஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்ததிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் செய்துவருகின்றது.அதேபோல் தற்பொழுதும் ஒரு தரமான செயலை செய்துள்ளது. கடந்த 1920 ஆம் ...

ராகுல் காந்திக்கு தொடர்ந்து , 5 காங்கிரஸ் மூத்த தலைவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்கணக்கு தற்காலிக தடை..

ராகுல் காந்திக்கு தொடர்ந்து , 5 காங்கிரஸ் மூத்த தலைவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்கணக்கு தற்காலிக தடை..

காங்கிரஸ் இன்ஸ்டாகிராமில் ஒரு பாதித்துள்ளது ,அதில் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தற்காலிக தடைசெயப்பட்டுள்ளதாக காங்கிரஸின் கணக்கின் ஸ்கிரீன் ஷாட் மற்றும் ட்விட்டரில் இருந்து ஒரு செய்தி ...

மோடி ஆட்சியில் நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிப்பு.

மோடி ஆட்சியில் நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிப்பு.

நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 29.11 கோடியாக அதிகரித்துள்ளது என   மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி  கூறியுள்ளார். அவர் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த  பதிலில் கூறியதாவது: கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 16.62 கோடியாக இருந்த எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி 29.11 கோடியாக அதிகரித்துள்ளது. இவர்களின் விவரம் இணைப்பு-2ல் கொடுக்கப்பட்டுள்ளது. நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தின் கீழ் இணைந்த எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு,  எரிவாயு மானியம் அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, 29.11 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்களில், 27.7 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தில் இணைந்துள்ளனர். மாநிலம் / யூனியன் பிரதேசம் வாரியாக இவர்களின் விவரம் இணைப்பு-1-ல் கொடுக்கப்பட்டுள்ளது.   எல்பிஜி மானியம், தானியங்கி முறையில்  வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.  இதற்கு  2 முதல் 3 வேலைநாட்கள் ஆகும். இயற்கை எரிவாயு சேவைகளை ஊக்குவிக்க நடவடிக்கைகள்: நாட்டில்  இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) சேவைகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிஎன்ஜி நிலையங்களின் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் வகுத்த குறைந்தபட்ச செயல் திட்டத்தின்படி, ஏலம் மூலம் அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிறுவனங்கள், 8 முதல் 10 ஆண்டுகளில் நாடு முழுவதும், 8181 சிஎன்ஜி நிலையங்களை அமைக்கும். இதன் விலைகள் சந்தை நிலவரப்படி தீர்மானிக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்க முயற்சி: தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலைகள், கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சுரங்க பகுதிகளில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக 50 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் வாகன எரிபொருளில், இயற்கை எரிவாயுவின் பங்கு அதிகரிக்க உதவும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஓபிசி பிரிவினருக்கான தனிப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் என்னென்ன ?

ஓபிசி பிரிவினருக்கான தனிப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் என்னென்ன ?

ஓபிசி பிரிவினருக்கான தனிப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து மக்களவையில்  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்கள் திரு.ஏ.நாராயணசாமி, சுஷ்ரி பிரதிமா பூமிக் ஆகியோர் எழுத்துபூர்வமாக இன்று பதில் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:  மத்திய அரசின் நேரடி வேலைவாயப்பு மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஏற்கனவே 27 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு சமூக நீதியை உறுதி செய்ய, ஓபிசி மாணவர்களுக்கு மெட்ரிக் வகுப்புகுகளுக்கு முன்னும், பின்னும் கல்வி உதவித் தொகைகள், வெளிநாட்டில் படிப்பதற்கான கல்விக் கடனில் வட்டி மானியம் அளிக்கும் டாக்டர் அம்பேத்கர் திட்டம், தேசிய அளவிலான ஆராய்ச்சி உதவித் தொகை, மாணவ, மாணவிகளுக்கு விடுதிகள் கட்டித் தருதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் உதவி, தொழில் தொடங்க மூலதன நிதி, குறைந்த வட்டியுடன் கூடிய கடனுதவி திட்டங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு மத்திய வேலை வாய்ப்பு மற்றம் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 10 சதவீத இடஒதுக்கீடு போன்ற திட்டங்கள் மத்திய அரசால் அமல்படுத்தப்படுகின்றன. போதை மறுவாழ்வு மையங்களில் ஆய்வு: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இ-அனுதான் இணையதளம் (https://grants-msje.gov.in) தகவல்படி, 2019-20-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள 65 ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்களில், மாநில அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களின் பரிந்துரைப்படி அந்த அமைப்புகளுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நிதிவழங்கியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியர்களுக்கான ஒதுக்கீடு: தற்போதுள்ள பட்டியலினத்தனர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் வராத, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத ஒதுக்கீடு உத்தராகண்ட், குஜராத், கர்நாடகா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மிசோரம், தில்லி, ஜம்மு காஷ்மீர், கோவா, அசாம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இதன் விவரம் கிடைக்கவில்லை. மத்திய அரசின் 10 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கண்காணித்து, காலியிடங்களை நிரப்பி வருகிறது. அவற்றின் விவரம் இணைப்பில் -1-இல் கொடுக்கப்பட்டுள்ளது. பிச்சை எடுக்கும் குழந்தைகள்: இந்தியப் பதிவாளர் இணையளத்தில் உள்ள தகவல் அடிப்படையில், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிவில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 29,237-ஆக உள்ளது.  பிச்சை எடுப்பவர்களுக்கான திட்டங்கள்: நலிவடைந்த தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு உதவ, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ‘ஸ்மைல்’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதில் பிச்சை எடுப்பவர்களின் மறுவாழ்வக்கான துணைத் திட்டமும் உள்ளது.  இதில் பிச்சை எடுக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, மருத்துவ வசதி அளிப்பது, ஆலோசனை வழங்குவது, கல்வி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, பொருளாதாரத் தொடர்புகளை ஏற்படுத்தி கொடுப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. பிச்சை எடுப்பவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவு நிதி மற்றும் மேம்பாட்டு கார்பரேஷனுக்கு மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் ரூ.1.50 கோடியை வழங்கியுள்ளது. பிச்சை எடுத்து வந்த 514 பேருக்கு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.182 கோடி ஒதுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு:  மனிதக் கழிவுகளை, மனிதர்களே அகற்றுபவர்கள் எந்த மாநிலத்திலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மனிதக் கழிவுகளை அகற்றுபவர்கள் இன்னமும் இருப்பதாக சில தன்னார்வ அமைப்புகள் கூறுகின்றன. ஆனால், இதற்கான ஆதாரங்களை நிருபிக்க முடியவில்லை.  கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 309 பேர் கடந்த 5 ஆண்டுகளில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், கைகளால் கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியுதவிகள் மாநிலம் வாரியாக இணைப்பு 1-இல் கொடுக்கப்பட்டுள்ளன. மதுரையில் கைகளால் கழிவுகளை அகற்றும் இரு துப்புரவு தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் மறுவாழ்வுக்கு ரூ.40,000 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது,  2013-ஆம் ஆண்டுக்கு முன், கைகளால் கழிவுகளை அகற்றிய  துப்புரவுத் தொழிலாளர்களின்  விவரம்: 2013-ஆம் ஆண்டுக்கு முன்பாக கைகளால் கழிவுகளை அற்றிய தொழிலாளர்கள் மாநில வாரியாக இணைப்பு-1-இல் கொடுக்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள், நிதியுதவி அளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இதில் இடம் பெற்றள்ளது. மராத்தா பிரவினருக்கான இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு: மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் ரத்து செய்தது. அரசியல் சாசன திருத்தப் பிரிவுகளை சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தபட்டப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலை மாநிலங்கள் தனியாகப் பராமரிக்க அதிகாரம் இல்லை என கூறியது. இந்த பட்டியலைப் பராமரிக்கும் மாநிலங்களுக்கான அதிகாரத்தைத் திரும்ப பெற, அரசியல் சாசனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்திற்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.183.67 கோடி விநியோகம்.

தமிழகத்திற்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.183.67 கோடி விநியோகம்.

2021-22-ஆம் ஆண்டிற்கான பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை (பிடிஆர்டி) மானியத்தின் 5-ஆவது மாதத் தவணையாக தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில், ரூ.183.67 கோடியும், 2021-22-ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.918.33 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நேற்று விடுவித்தது. இந்த 5-ஆவது தவணை விநியோகத்துடன், மொத்தம் ரூ.49,355 கோடி, தகுதி பெற்றுள்ள மாநிலங்களுக்கு பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக இந்த நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 275-ஆவது பிரிவின்படி இந்த பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. பகிர்வுக்குப்பின் மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியைப் போக்க, நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியங்கள் மாதத் தவணைகளாக வழங்கப்படுகின்றன. 17 மாநிலங்களுக்கு இந்த மானியத்தை வழங்க 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மாநிலத்தின் வருவாய் மற்றும் செலவினங்களின் மதிப்பீடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியின் அடிப்படையில் மாநிலங்களுக்கான தகுதி, மானியத்தின் அளவு ஆகியவை நிதி ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டது. பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ.1,18,452 கோடியை 17 மாநிலங்களுக்கு 2021-22 நிதியாண்டில் வழங்க வேண்டும் என்று நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதில் ரூ. 49,355 கோடி ‌(41.67%) இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்துக்கு 15-ஆவது நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்கள்: தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அசாம், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம்.

அஞ்சலக சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள்.

அஞ்சலக சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள்.

அஞ்சலக சேமிப்புக் கணக்குத் திட்டத்தில் சேர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக அஞ்சல் துறை பல்வேறு கூடுதல் வசதிகளை, கட்டணமின்றி அளித்து வருகிறது. ஏடிஎம் அட்டை: கட்டணமின்றி வழங்கப்படும் இந்த ஏடிஎம் ...

Page 8 of 24 1 7 8 9 24

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x