51வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிகழ்ச்சிகள் அறிவிப்பு.
51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ) கோவாவில் 2021 ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஆன்லைன் மூலம் நடைபெறும் ...
51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ) கோவாவில் 2021 ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஆன்லைன் மூலம் நடைபெறும் ...
காரீப் 2020-21 பருவத்தில், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா, மத்திய ...
உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து இண்டிகோ 6இ66 என்னும் விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ஜாஹிர் உசைன் (35) என்பவரை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனை செய்ததில் அவரது உடலில் 390 கிராம் எடையிலான தங்கப்பசை அடங்கிய ஒரு பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ. 16.81 லட்சம் மதிப்பில் 329 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தொண்டாமுத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினையும், திமுகவையும் விரட்டி விரட்டி வெளுத்துள்ளது அதிமுக தரப்பு. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ”திமுகவுக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது. கருணாநிதிக்கு கடன் பிரச்னை கழுத்தை நெரித்தது. கோபாலபுரம் வீடே அவரது கையை விட்டுப் போவது போலிருந்தது. அவரது கடனை அடைக்க எம்.ஜி.ஆர். நடித்து உதவினார். இதுதான் வரலாறு. கடனிலிருந்து மீண்ட கருணாநிதியின் குடும்பம் இன்று மிக மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் வரிசையில் உள்ளது. இது எப்படி சாத்தியமென்றால் எல்லாமே ஊழல் பணம். ஊழல் பணம். ஸ்டாலின் நடத்திய கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். திமுகவுக்கு ஏழரை துவங்கிவிட்டது. அதனால்தான் அவர் தொண்டாமுத்தூருக்கு வந்து வம்பிழுத்துள்ளார். திமுகவின் கதையை இந்த தேர்தலோடு மக்கள் முடித்து, அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும். இந்துக் கடவுள்களை பழித்துவிட்டு, இந்துக்களிடமே ஓட்டுக்களை வாங்குவதற்கு நாடகமாடி வருகிறது திமுக. மக்கள் ஏமாந்துவிடக்குடாது.” என்று விளாசித் தள்ளினார். இதே கூட்டத்தில் பேசிய அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் விந்தியாவோ ”மக்கள் கிராமசபை கூட்டத்தை நடத்துவதென்றால் அங்கே மக்கள்தானே இருக்க வேண்டும். அம்மக்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்வதுதானே ஸ்டாலினின் கடமை. ஆனால் தன் கட்சிக்காரர்களை கொண்டு வந்து உட்கார வைத்துக் கொண்டு மக்கள் கிராம சபை! என்று அதை சொன்னால் எப்படி ஏற்க முடியும்? கேள்விகேட்ட பெண்ணை அடித்து விரட்டியதன் மூலம் ஸ்டாலினின் தைரியம் புரிந்துவிட்டது. இவரெல்லாம் முதல்வராகவே முடியாது என்று அவரது அண்ணன் அழகிரியே சொல்லிவிட்டார். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி, ஆட்சியான திமுகவுக்கு ஊழல் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.” என்று ஆவேசம் காட்டினார். ஆக மொத்தமா சேர்ந்து முடிச்சுட்டாங்க!
சாத்தியமுள்ள விமான நிறுவனங்களின் மூலம் சிறப்பு நோக்க முகமையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பணிகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தொடங்கியுள்ளது. அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். கடல் விமான சேவைகளுக்காக பல்வேறு வழித்தடங்கள் பரிசீலனையில் உள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபர், லட்சத்தீவுகள், கவுகாத்தி நதிக்கரை, அசாமில் உள்ள உம்ரான்சோ நீர்த்தேக்கம், யமுனா நதிக்கரை, தில்லியிலிருந்து அயோத்தி வரை, தெஹ்ரி, ஸ்ரீநகர் (உத்தரகாண்ட்), சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு கடல் விமான சேவைகள் திட்டமிடப்படுகின்றன. கேவடியா மற்றும் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரைக்கு கடல் விமான சேவை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2020 அக்டோபர் 31 அன்று இது துவக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே, முக்கிய துறைமுகங்களுக்கான தூர்வாருதல் வரைவு வழிகாட்டுதல்கள் மீதான கருத்துகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது. பங்குதாரர்களுடன் இணைந்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. http://shipmin.gov.in/sites/default/files/Draft%2520guidelines%2520for%2520comments_compressed.pdf என்னும் முகவரியில் வரைவு வழிகாட்டுதல்களை காணலாம். கருத்துகளை 2021 ஜனவரி 31 வரை anil.pruthi@nic.in என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறிய கட்டுமான நிறுவனங்களுக்கு மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் ரூ.1.59 கோடி அபராதம் விதித்தன. கட்டிடங்கள் கட்டுதல், பழைய கட்டிடங்களை இடித்தல் போன்றவற்றால் ஏற்படும் ...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை (6-ஆம் தேதி) நடைபெறும் நிகழ்ச்சியில் AIIM என்ற மதவெறி கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி பங்கேற்கிறார் என்று திமுக ...
கிராம சபை கூட்டத்தில் பெண் மீது தாக்குதல் நடத்த துணையாக இருந்த ஸ்டாலினுக்கு தலைவராக இருக்க தகுதியே இல்லை என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் ...
மதுரையில் உள்ள பாண்டி கோவில் அருகே துவாராக பேலஸில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். முதலில் தனது உரையை ஆரம்பித்த ...
இந்திய சீரம் மையம் மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம்(DCGI) ஒப்புதல் அளித்துள்ளதை, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில், ஒரு தீர்க்கமான திருப்புமுனை என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். தொடர் டிவிட்டுகளில், பிரதமர் கூறியதாவது: ‘‘தீவிர போராட்டத்தை வலுப்படுத்த, ஒரு தீர்க்கமான திருப்புமுனை! நாட்டில் கோவிட் இல்லாத ஆரோக்கியமான சூழலை விரைவுபடுத்த, @SerumInstIndia மற்றும்@BharatBiotech ஆகியவற்றின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். கடினமாக உழைக்கும் நமது விஞ்ஞானிகள் மற்றும் புத்தாக்க படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.’’ ‘‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 கோவிட் தடுப்பூசிகளை அவசரக்கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்யும். இது, தற்சார்பு இந்தியா கனவை நிறைவேற்றும், நமது விஞ்ஞானிகளின் ஆர்வத்தை காட்டுகிறது. இதில் அக்கறை மற்றும் கருணை உள்ளது.’’ ‘‘நெருக்கடியான நேரத்திலும், சிறப்பான பணியை செய்ததற்காக, மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், விஞ்ஞானிகள், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்கள் அனைவருக்கும், நமது நன்றியை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். பல உயிர்களைக் காப்பாற்றியதற்காக நாம் அவர்களுக்கு எப்போதும், நன்றியுள்ளவர்களாக இருப்போம்.’’
