Tag: TamilNews

இந்திய கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்த டிஜிட்டல் பட்டா வழங்கும் பிரதமர் மோடி.இனி பினாமி சொத்துக்கு ஆப்பு!

இந்திய கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவும்,  மற்றும் பல லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலும் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளை பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் முக்கிய நிகழ்வை பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அக்டோபர் 11-ம்தேதி தொடங்கி வைக்கிறார். மொபைல் போன்கள் வழியே அனுப்பப்படும் குறுஞ்செய்தி இணைப்பின் வழியே சொத்து அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை,  ஒரு லட்சம் சொத்து உடமையாளர்கள் பெறும்  வசதி தொடங்கப்பட உள்ளது. அதன்பின் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சார்பில்  சொத்து அட்டைகள் நேரடியாக வழங்கப்படும்.  கர்நாடகாவில் 2, உத்தரகாண்ட்டில் 50, மத்தியபிரதேசத்தில் 44, மகாராஷ்டிராவில் 100, ஹரியாணாவில் 221, உத்தர பிரதேசத்தில் 346 என  6 மாநிலங்களின் 763 கிராமங்களைச் சேர்ந்தவர்கள்  இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர்.  மகாராஷ்டிரா மாநிலத்தைத்தவிர மேற்குறிப்பிட்ட இதர மாநிலங்களைச் சேர்ந்த பயனாளிகள் ஒரு நாளுக்குள் சொத்து அட்டைகளை பெறுவார்கள். சொத்து அட்டைகள் வழங்க குறைந்த பட்சத்தொகையை வசூலிக்கும் ஒரு முறையை மகாராஷ்டிரா அரசு தொடங்க உள்ளதால், இந்த திட்டம்அந்த மாநிலத்தில் தொடங்குவதற்கு ஒரு மாதம் ஆகும். கடன் பெறவோ அல்லது இதர நிதி பயன்பாடுகளுக்காகவோ கிராம மக்கள், தங்களது சொத்துகளை,  ஒரு நிதி சொத்தாக உபயோகிப்பதற்கு இந்த நடவடிக்கை  வழி வகுக்கும். தவிர,  பல லட்சக்கணக்கிலான கிராம சொத்து உடமையாளர்கள் பயன் அடையும் வகையில் மிகவும் நவீன முறையிலான தொழில்நுட்பத்துடன் கூடிய இதுபோன்ற பெரிய அளவிலான நடைமுறை  இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்வின்போது பிரதமர் சில பயனாளிகளுடன் உரையாட உள்ளார். மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்வு அக்டோபர் 11ம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கும்.  மேலும் இந்த டிஜிட்டல் பட்டா முறை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்டுகிறது. ஏற்கனவே சொத்துக்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் ஆதார் அவசியம், இனி அனைத்தும் ...

இதெல்லாம் பினராயி விஜயனுக்கு தெரியும்! போட்டு கொடுத்த தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ்! குற்றப்பத்திரிகையில் பினராயி பெயர்!

இதெல்லாம் பினராயி விஜயனுக்கு தெரியும்! போட்டு கொடுத்த தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ்! குற்றப்பத்திரிகையில் பினராயி பெயர்!

கேரள மாநிலத்தில் , முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. கேரளாவை உலுக்கி வரும் பிரச்சனை என்று பார்த்தால் சொப்னாவும் தங்கக் ...

எடப்பாடியிடம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு கெஞ்சிய தி.மு.க! இது தேவையா உதயநிதி!

எடப்பாடியிடம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு கெஞ்சிய தி.மு.க! இது தேவையா உதயநிதி!

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி, அநாகரிகமாக பேசுவது வாடிக்கையாகிவிட்டது. எதோ டீ கடையில் நின்று அரசியல் பேசுவது போல் நாகரீகமற்ற பதிவுகளை டுவிட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ...

இந்திய ஆக்கி அணிகளுக்கான பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்திய ஆக்கி அணிகளுக்கான பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி பயிற்சி பெங்களூருவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெற்கு மையத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்திய ஆக்கி அணிகளுக்கான பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இது முழு வீச்சை விரைவில் எட்டும் என்று அணி தலைவர்களும், பயிற்சியாளரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அணியின் தலைவர் மன்பிரீத் சிங் உட்பட முகாமுக்கு வந்த ஆறு வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்திய விளையாட்டு ஆணைய மையத்திலும் மருத்துவமனையிலும் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தற்போது மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். https://www.youtube.com/watch?v=4LDyxzhJrAI&t=3s "நான் பயிற்சிக்கு திரும்பிய போது எனக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது நாங்கள் மீண்டும் பயிற்சியில் இணைந்துள்ளோம். நாங்கள் படிப்படியாக பழைய நிலைமைக்கு திரும்புவதற்கான திட்டத்தை பயிற்சியாளர்கள் வகுத்துள்ளனர்  விரைவில் பயிற்சி முழு வீச்சை எட்டும் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது," என்று மன்பிரீத் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் – பன்னீர்செல்வம் அறிவிப்பு!

 அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து நீண்ட ஆலோசனை நடைபெற்று வந்தது. இதனிடையே கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு 7-ம் தேதியான இன்று வெளியாகும் ...

இரண்டு நாள் இந்திய-கனடா வேளாண் தொழில்நுட்ப மாநாடு தொடங்கியது

இரண்டு நாள் இந்திய-கனடா வேளாண் தொழில்நுட்ப மாநாடு தொடங்கியது

ஒரே தேசம் ஒரே சந்தையை உருவாக்குவதற்கான கொள்கை சீர்திருத்தங்கள், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளை பாதுகாப்பதற்காக சரியான நடவடிக்கைகளுடன் கூடிய ஒப்பந்த விவசாயம், ரூபாய் ஒரு லட்சம் கோடி விவசாய உள்கட்டமைப்பு நிதி ஆகியவை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அறிவிக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகள் என்று மத்திய வேளாண், விவசாயிகள் நலம், ஊரக வளர்ச்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய அரசின் வெளியுறவுத்துறை ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய கனடா வர்த்தக சபை ஏற்பாடு செய்த இரண்டு நாள் இந்திய-கனடா வேளாண் தொழில்நுட்ப மெய்நிகர் மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். ஆன்லைன் சந்தைகள் மற்றும் திறன்மிகு வேளாண்மையை உருவாக்க இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், விவசாயத்துறையை ஒரு முதலீட்டு வாய்ப்பாக மாற்ற இந்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் திரு தோமர் தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=sxR0LO9tb4A&t=4s கடந்த ஆறுமாத சர்வதேச பெருந்தொற்று காலத்தில் இந்திய விவசாயத் துறையில் குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் மேலும் கூறினார். வேளாண் தொழில்நுட்ப துறையில் மட்டுமே 450க்கும் மேற்பட்ட புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) இந்தியாவில் இருப்பதாக அமைச்சர் கூறினார். உலகில் தொடங்கப்படும் ஒன்பது புது நிறுவனங்களில் ஒன்று இந்தியாவில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய கனடா அரசின் வேளாண் மற்றும் விவசாய உணவுகள் அமைச்சர் திருமிகு மேரி கிளவுட் பிபு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

வன உயிர்களை பாதுகாப்பதற்கும், இணக்கத்தோடு இணைந்து வாழ்வதற்குமான உறுதியை வலியுறுத்துவதற்கான நிகழ்வே வன உயிர்கள் வாரம்: பிரதமர் மோடி.

'புலித் திட்டம்' மற்றும் 'யானைத் திட்டம்' ஆகியவற்றின் வெற்றியை தொடர்ந்து அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்காக 'சிங்கத் திட்டம்'  மற்றும் 'டால்பின் திட்டம்' ஆகிய பிரத்யேக திட்டங்களை நாடு செயல்படுத்தி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். வன உயிர்கள் வாரத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த திட்டங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விளைவுகளை எட்டுவதற்காக அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் கோரினார். அமைதி மற்றும் அகிம்சையின் அடையாளமாக விளங்கிய மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி கொண்டாடப்படும் வன உயிர்கள் வாரம், வன உயிர்களை பாதுகாப்பதற்கும், அனைத்து உயிர்களும் இணக்கத்தோடு இணைந்து வாழ்வதற்குமான உறுதியை வலியுறுத்துவதற்கான சரியான தருணம் என்று பிரதமர் கூறினார். https://www.youtube.com/watch?v=Lo1e27nR-yQ பாதுகாக்கப்பட்ட பகுதிகள் துடிப்புடனும் அதிக அளவிலும் விளங்கும் இன்றைய காலகட்டத்தில், வன உயிர்களின் பாதுகாப்பும் முன்னெப்போதையும் விட வலிமை பெற்று இருப்பதாக அவர் கூறினார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்த திரு மோடி, வன உயிர்கள் செழிப்புடன் திகழ இத்தகைய பகுதிகள் அதிகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆசிய சிங்கங்களின் கடைசி மக்கள் தொகை இந்தியாவில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கு முன்னதாகவே எட்டப்பட்டதாக கூறினார். நெகிழி கழிவு மேலாண்மைக்கு இந்தியா அளித்துவரும் முக்கியத்துவத்தை பற்றி குறிப்பிட்ட பிரதமர், நீடித்த வளர்ச்சிக்காகவும், வளமான பல்லுயிர் தன்மைக்காகவும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் பயன்பாட்டை குறைக்க இந்தியா முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். இடம்பெயரும் உயிர்களின் இல்லமாக இந்தியா திகழ்வதால் இந்த உயிர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் நாடு அளித்து வருவதாக திரு மோடி கூறினார். https://www.youtube.com/watch?v=sxR0LO9tb4A&t=4s\ உலகின் நிலப் பரப்பளவில் 2.4% உள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில் 17 சதவீதத்தை தன்னகத்தே கொண்டு இருப்பதாக கூறிய திரு மோடி, இந்தியாவின் வளர்ச்சி தேவைகள் மிகவும் அதிகமானவை என்றார். அதேசமயம் வன உயிர்கள் மற்றும் பல்லுயிர்களின் பாதுகாப்பும் அதே அளவுக்கு முக்கியமானது என்று அவர் கூறினார்.----                         ...

கற்பனைகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது! தெறிக்கவிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் !

கற்பனைகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது! தெறிக்கவிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் !

நேற்று பாஜக சார்பில் விவசாய அணியின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் பங்கேற்றார் அப்போது வேளாண் ...

உத்திரபிரதேச ஹத்ராஸ் வழக்கு நான்கு பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா PFI உறுப்பினர்கள் கைது.!

உத்திரபிரதேச ஹத்ராஸ் வழக்கு நான்கு பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா PFI உறுப்பினர்கள் கைது.!

ஹத்ராஸ் சம்பவத்தினை வைத்து நாட்டில் மிகப்பெரும் கலவரத்தை உண்டு பண்ணிவிடம் என்ற நோக்கத்துடன் காங்கிரஸ் திமுக போன்ற அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகிறது. இந்தியாவில் அதிகம் ...

Page 203 of 210 1 202 203 204 210

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x