தற்போது தான் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைய தொடங்கியுள்ளது. 3 ஆம் அலை வருவதற்கு முன்னர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி விட வேண்டும் எனும் நோக்கத்தில் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் துரிதபடுத்தியுள்ளது . மேலும் இந்தியா முழுவதும் தடுப்பூசி இலவசமாக கொடுத்து வருகிறது மத்திய அரசு.
ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போட்டு சாதனையும் படைத்து இந்தியா. இந்த நிலையில் இந்தப் பணியை விரிவுபடுத்தும் நோக்கில் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் பல தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி தனியார் மருத்துவமனைகள் மற்றும் சங்கங்கள் தொண்டு நிறுவனங்கள் நிறுவனங்கள் சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்துகின்றன.
இதையும் பணம் சம்பாதிக்கும் நேரமாக மாற்றியுள்ளது ஒரு சில தனியார் மருத்துவமனைகள். அரசிடம் முறையான அனுமதி பெறாமல் போலி மருந்துகளைக் கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டதாகக் கூறி மக்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மேற்கு வங்கத்தில் அதிகமாக காணப்டுகிறது.
கொல்கத்தாவில் இம்மாதிரியான பல கும்பல் சுற்றிவருவதாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்வது மம்தா ஆவர். அவர் இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை . இதனை தொடர்ந்து மம்தாவிற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது போலி தடுப்பூசி.
மம்தா கட்சியை சார்ந்த ஒரு மக்களவை உறுப்பினரேயே ஏமாற்றி போலி தடுப்பூசியைப் போட்டு அனுப்பிய விவகாரம் தான் மம்தாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி மிமி சக்கரவர்த்தி. இவரிடம் நபர் ஒருவர் தன்னை ஐஏஎஸ் அதிகாரியாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
அவர் சார்பில் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதற்கு நீங்கள் தான் தலைமையேற்க வேண்டும் என மிமியிடம் கூறியிருக்கிறார். அவர் உண்மையாகத் தான் சொல்கிறார் என நினைத்து மிமியும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருக்கிறார். அதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மிமி, முதல் டோஸை அங்கே போட்டுக்கொண்டுள்ளார். அவருடன் 200க்கும் மேற்பட்ட மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தடுப்பூசி போட்டதற்கான உறுதிப்படுத்தும் மெசெஜ் அவர் வீடு சென்று சேர்ந்த உடனே அனுப்பப்படும் என அந்நபர் உறுதியளித்திருக்கிறார்.
இதை நம்பி வீட்டிற்கு சென்று ஒரு நாள் ஆகியும் சான்றிதழ் வரவில்லை. இதற்குப் பிறகே போலியான முகாம் என தெரியவந்துள்ளது. ஏமாற்றமடைந்த அதிர்ச்சி தாங்காமல் மிமி போலீசில் புகார் கொடுத்துள்ளார். தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகம் செய்த தெற்கு கொல்கத்தாவை சோர்ந்த டெபஞ்சன் தேவை கைது செய்தனர். தற்போது மக்களுக்கும் எம்பிக்கும் போடப்பட்டது உண்மையான தடுப்பூசியா, போலியான தடுப்பூசியா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இச்சூழலில் மிமி சக்கரவர்த்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நீரிழப்பு, வயிற்று வலி ஏற்பட்டதாகவும், அவரது ரத்த அழுத்தம் குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. இது போலி தடுப்பூசியால் ஏற்பட்ட உடல்நலக் குறைவா என மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















