பஞ்சமி நிலம் மூலபத்திரம் என்றால் தி.மு.கவிற்கு சற்றுபயம் வந்துவிடும் என்பதே உண்மை. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தை அபகரித்து கட்டப்பட்டது என முதலில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரம்பிக்க அதை தொடர்ந்து பா.ஜ.க வின் தடா பெரியசாமி, டாக்டர் ஸ்ரீநிவாசன் ஆகியோரின் புகாரை எஸ்.சி. எஸ்.டி ஆணையத்திடம் புகார் அளிக்க அந்த புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணையில் இறங்கியது எஸ்.சி. எஸ்.டி ஆணையம்.
இதனை தொடர்ந்து திமுக-தலைவர் ஸ்டாலினுக்கு முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைப்பு வந்தது.பின்பு மாற்று பிரமுகராக ஆர்.எஸ்.பாரதியை அனுப்பியது மேலும் முரசொலி அலுவலகம் வாடகைக்கு தான் இருக்கிறோம் என பல்டி அடித்தார் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின்.
சென்னை, சேலம், மதுரை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பஞ்சமி நிலத்தை அபகரித்த முரசொலியின் மூலப் பத்திர நகலை கண்டுபிடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்புடன் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தியது . ஆதித்தமிழர் மக்கள் கட்சி சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி வருவதாக கூறும் திமுக நிர்வாகிகள் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலத்தை அபகரித்து மோசடி செய்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் உண்மையானவராக, நேர்மையானவராக, நீதியை நிலைநாட்டுபவராக, பட்டியலின மக்களை பாதுகாக்கும் தலைவராக இருந்தால், முரசொலிக்காக அபகரித்த பஞ்சமி நிலத்தை ஒப்படைத்திருப்பார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை, மாறாக பஞ்சமி நிலத்தை அபகரிக்க பல்வேறு திட்டங்களை ஆர்.எஸ் பாரதி மூலமாக அரங்கேற்றி வருகிறார் என குற்றச்சாட்டு எழுந்தது
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ” பஞ்சமி நிலம் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யாமல் புகார் அளிக்கப்பட்டுள்ளது ” என முரசொலி அறிக்கட்டளை தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை தொடர்ந்து முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில் தான் உள்ளது என்பதற்கான வருவாய்த்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.