நாடு பிடிக்கும் ஆசை கொண்ட சீனா. இந்தியாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளை தனது வல்லாதிக்கத்தின்கீழ், அடிபணிய வைக்க முயற்சிகளை செய்து வருகிறது.
ஏற்கனவே, சீனா விரித்த கடன் வலையில் இலங்கை விழுந்துவிட்டது. பாகிஸ்தான் எப்போதோ சரணடைந்து விட்டது.
இந்த நிலையில் ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்பற்ற உடன் பாகிஸ்தானில் சீனர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடைபெற்றது. பாகிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகத்தில் சீனர்களுக்கு எதிராக நடத்த ப்பட்ட தற்கொலை படைத்தாக்குதலில் 8 க்கும் மேற்பட்ட சீனர்கள் பலியாகினார்கள.
இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு எதிராக பல இடங்களில் மக்கள் போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
குவாடர் துறைமுகத்தை சீனா கையகப்ப டுத்தி பல வருடங்களாகிறது.அதே மாதிரி சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும் பாகிஸ்தானில் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது.
ஆனால் இப்பொழுது தான் பாகிஸ்தானில் உள்ளவர்கள் சீனா்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற ஆரம்பித்து இருக்கிறார்கள்
ஒரு பக்கம் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு விலகுகிறது. இன்னொரு பக்கம் பாகிஸ்தானில் சீனாவுக்கு எதிராக போராட்டம் வெடிக்கிறது இரண்டு நிகழ்வுகளுக்கும் நிச்சயமாக தொடர்பு இருக்கிறது.
அமெரிக்காவை எதிர்த்து போராடிய பாகிஸ்தான் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் சிறைகளில் தான் இது வரை இருந்தார்கள்
அவர்கள் இப்பொழுது முழு அளவில் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு பிறகு தான் பாகிஸ்தானில் உள்ள சீனர்களுக்கு எதிரான தற்கொலை படைத்தாக்குதலும் போராட்டங்களும்நடைபெற ஆரம்பித்து இருக்கின்றன’
ஆக தலிபான்களை வைத்து நடைபெறஇருக்கும் ஆடுபுலி ஆட்டத்தின் முக்கிய நோக்கமே பாகிஸ்தானில் உள்ள சீனாவுக்கு எதிரானதாகவே தெரிகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















