சகாயம் IAS, இயற்கை விவசாயத்தை பின்பற்ற சொன்னால் கைத்தட்டி ஆர்பரிக்கும் மீடியா வியாதிகள் அண்ணாமலை IPS, 72 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருதை சொன்னால், அதை எள்ளி நகையாடுகிறார்கள். களத்தில் இறங்கி இயற்கை விவசாயம் செய்யும் நபர் எந்த கட்சி என பார்த்து செயல்படும் ரெட் லைட் மீடியாஸ்.
மேலும் அண்ணாமலை படித்து IPS ஆனவர். சகாயம் நேர்மையானவராகவே இருக்கட்டும். ஆனால் அவர் Conferred IAS என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நீட்டும் ஊடகங்கள் அண்ணாமலைக்கு ஏன் அலறுகின்றன..?
அஜித் ஜோகி,யஷ்வந்சின்கா, அல்போன்ஸ் ஜோசப் என அனைவரும் முன்னாள் சிவில் நிர்வாகிகள் தான். N. Jaya Prakash Narayana முன்னாள் IAS அதிகாரி லோக்சக்தா கட்சியை நிறுவி ஆந்திர அரசியலில் ஜொலிக்கிறார். பல சிவில் நிர்வாகிகள் அரசியலில் களம் கண்டு வென்றுள்ளனர்.
மேலும் இராணுவத்திலிருந்து வந்த அதிகாரிகள் பலர் அரசியலில் முதல்வராகவும்,மந்திரிகளாகவும் மின்னுகின்னறனர். ராணுவ தளபதி வீ.கே. சிங்
கூட தற்போது மத்திய மந்திரிதான்.
மதிப்பிற்குரிய முன்னாள் பிரதமர் மன்மோகன் கூட ரிசரவ் பேங்க் கவர்னர் தானே?
படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூவிய டூபாகூர்கள் இன்று சிலர் வந்ததும் அலப்பரை செய்கின்றன.
ரெளடிகளும், பொறுக்கிகளும் சூழ்ந்த அரசியலே இங்கு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது தமிழக ஊடகங்களே. அவர்களை விட மாஃபியாக்கள் வேறு எவரும் இங்கு இல்லை.
கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் காவிதமிழன்.