தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கிழக்கு  திசை  காற்றலைகளின் காரணமாக அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு தென் தமழக மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேக மூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான  பனி மூட்டம் காணப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version