மக்களவை தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. பெரும்பாலும் ஏப்ரல் இறுதியிலும் -மே முதல்வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளுக்கும் தயாராகி வரும் நிலையில் பாஜக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளில் தீவிரம் செலுத்தி வருகிறது. மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் 370 இடங்களை பிடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது பா.ஜ.க.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக வேட்பாளர்களை பட்டியலை வெளியிட பா.ஜனதா தீர்மானித்தது. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவின் மத்திய தேர்தல் கமிட்டி கூடி ஆலோசனை செய்ததை தொடர்ந்து 195 வேட்பாளர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது பாஜக. வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளார் ! காந்தி நகரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடுகிறார். 34 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த பட்டியலில் தமிழக வேட்பாளர்கள் இடம்பெறவில்லை. தற்போது தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் தொடங்கியிருப்பதால் அப்பட்டியலில் தமிழகம் இடம் பெறவில்லை. இந்த நிலையில் தமிழக கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசுவதற்கு குழு அமைக்கப்பட்டது அக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன்,தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ நைனார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
ஜி.கே வாசன் ஜான் பாண்டியன் பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசிவருகிறார்கள். இந்த நிலையில் பாஜகவின் மையக்குழு கூட்டம் இன்று பாஜக தலைமையலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்
நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கின்ற கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அந்த பகுதியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் அந்தத் தொகுதியுடைய வேட்பாளராக யாரை கருதுகிறார்கள் யார் வந்தால் சரியாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ அதனடிப்படையில் வேட்பாளர் தேர்வு நடைபெறும்.
ஜனநாயக ரீதியாக வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்க்காக ஒவ்வொரு தொகுதிகளிலும் இரண்டு தலைவர்கள் அனுப்பப்படுவார்கள் அவர்களிடம் ஒவ்வொரு தொகுதியைச் சார்ந்த நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை கூறலாம்.நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அந்த குழுவினை சந்தித்து தங்களின் விருப்பத்தை தெரிவிக்கலாம் நாளை காலை 10 மணிக்கு ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட அலுவலகங்கள் அல்லது நாடாளுமன்ற தேர்தல் அலுவலகங்களில் இந்த கூட்டமானது நடைபெறும். மேலும் எந்த தொகுதிக்கு எந்த தலைவர்கள் செல்லப் போகிறார்கள் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இரண்டு தலைவர்கள் செல்வார்கள் யார் செல்லப் போகிறார்கள் என்ற தகவல் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்படும்
அடுத்ததாக மாநில அளவில் தேர்தல் குழு அமைக்கப்படும் அந்த குழுவில் கட்சியினுடைய முக்கிய தலைவர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் இடம் பெறுவார்கள் இவர்களின் பார்வைக்கு உத்தேச வேட்பாளர் பட்டியல் கொடுத்து பரிசீலனை செய்யப்படும் மற்றும் வேட்பாளர்களின் நேர்காணல் நடைபெறும், அதன் பிறகு தான் உத்தேச வேட்பாளர் பட்டியலை வருகின்ற 6 ஆம் தேதி டெல்லிக்கு கொடுக்கப்படும்.என தெரிவித்தார்.