பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது .தற்போது பிரதமா் மோடியைத் தவிர மொத்தம் 53 மத்திய அமைச்சா்கள் உள்ளனா்.இன்று மாலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலையில் நடைபெற இருந்த அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
மேலும், பிரதமர் இல்லத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், புதிதாக அமைச்சரவையில் இடம்பெற உள்ள ஜோதிராதித்யா சிந்தியா, நாராயண் ரானே, சர்பானந்தா சோனாவல், அஜய் பட், பூபிந்தர் யாதவ், ஷோபா கரன்லஜே, சுனிதா துகல், மீனாட்சி லேகி, பாரதி பவார், ஷாந்தனு தாக்கூர், கபில் பாட்டீல், ஐக்கிய ஜனதா தளத்தின் ஆர்சிபி சிங், லோக்ஜனசக்தி கட்சியின் பசுபரதி பராஸ், அப்னா தள கட்சியின் அனுபிரியா படேல், மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, பர்சோத்தம் பூரபாலா, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.பாஜக தலைவரும் கலந்து கொண்டார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரமேஷ் பொக்ரியால் ராஜினாமா செய்தனர் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவாரும் ராஜினாமா செய்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மத்திய அமைச்சர்களாக 43பேர் பதவி ஏற்க உள்ளார்கள் இதன் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது இந்த பட்டியலில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பெயரும் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை மத்திய அமைச்சராக பதவி ஏற்கிறார் எல்.முருகன். இதன் காரணமாக தமிழக பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு உருவாக்கி உள்ளது.