காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு.கடந்தாண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜகவை வலுப்படுத்த தேசிய தலைமை முடிவெடுத்து அதற்கான காய்களை நகர்த்தி வருகிறது. தமிழகத்தில் 4 இடங்களில் தாமரை மலர்ந்தது. இதனை வேராக கொண்டு ஆலமரம் போல வளர புதிய ஸ்கெட்ச் போட்டு வருகிறது தேசிய தலைமை. இதன் காரணமாக முன்னாள் தலைவர் முருகன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக அறிவித்து அதிரடியாக களம் இறங்கியுள்ளது தேசிய தலைமை பாஜக!
அண்ணாமலை அவர்களை தமிழக பாஜக தலைவராக அறிவித்த கையேடு டெல்லியில் முகாமிட்டுள்ளார் நடிகை குஷ்பு பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல். சந்தோஷ், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிஷன் ரெட்டி, முருகன் உள்ளிட்ட மேலிட தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். இதில் தமிழகத்தின் திமுகவை எதிர்க்க ஆயிரம் காரணங்கள் உள்ளது. அனைத்தையும் மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என விவாதிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை ஒரு புறம் திமுகவை வதம் செய்தால் மறுபுறம் குஷ்பு அவர்கள் என தேசிய பாஜக திட்டமிட்டுள்ளது. அதுவும் தாய்மார்களுக்கு 1000, வாக்குறுதி சிலிண்டர் மானியம் இதை பற்றி பேச பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு போராட்டம் நடத்த பெண் அவசியம் அதிலும் குஷ்பு என்றால் மக்களை எளிதாக சென்றடையும்!
மேலும் தமிழக அரசியலை பொறுத்தவரையில் எப்போதும் பெண் அரசியல்வாதிகளுக்கு தனி இடம் உண்டு. அவர்களின் பேச்சுக்கள் எப்போதும் மக்களை எளிதாக சென்றைடையும் தி.மு.கவிற்கு எதிராக பேச ஒரு பெண் எப்போதும் தேவை அவரின் பேச்சு மீடியாக்களில் வெளிவரவேண்டும் அதற்கான ஆள் தற்போது அரசியல் வட்டாரத்தில் வானதி சீனிவாசன் மற்றும் அது குஷ்பு தான். வானதி சீனிவாசன் அவர்கள் தேசிய பதவியில் இருப்பதாலும் பாஜக மகளிர் அணியினை இந்தியா முழுவதும் சுற்று பயணம் செயற்குழு கூட்டம் என தொடர் பயணத்தில் உள்ளார். மேலும் மகளிர் அணியினை வலுப்படுத்தி வருகிறார். கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால் தொகுதி பணியினையும் செய்து வருகிறார். இதன் காரணமாக தான் குஷ்புவை களமிறக்க காத்து கொண்டிருக்கிறது தேசிய தலைமை பா.ஜ,க. . சமூக வலைத்தளங்களில் திமுகவில் ஐக்கியம் ஆகிறார் குஷ்பு என செய்திகள் வலம் வந்தது இந்த நிலையில் நடிகை குஷ்பு அளித்த பேட்டியில்
மனசாட்சியை அடகு வைத்து விட்டு, கீழ்த்தரமான செய்தியை சிலர் பரப்புகின்றனர். எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி பாஜகவில் இணைந்தேன். பா.ஜ.கவில் சேர்ந்த உடன், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அண்ணாமலையை விட வேறு யாரும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பலமாக இருக்க முடியாது.” நான் கட்சியிலும், ஆட்சியிலும் பதவி எதையும் கேட்கவில்லை. வரவேண்டிய நேரத்தில் பதவி வரும்.என்று கூறியுள்ளார்.