பாரத திருநாட்டில் இன்னும் வெகு விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற நடைபெற உள்ளது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் களம் காண ஆயத்தமாகி வருகிறார்கள். தேர்தல் ஆணையமும் தேர்தல் நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. வரும் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் பல செய்தி சேனல்களும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
செய்தி தொலைக்காட்சிகள் வெளியிட்ட அனைத்து கருத்து கணிப்புகளிலும் அடுத்த ஆட்சியை மீண்டும் பாஜக தான் கைப்பற்றும் எனவும் சென்ற முறை வென்ற இடங்களை விட தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வென்று பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளார்கள். மேலும் வட இந்தியாவில் மட்டுமன்றி தென்னிந்தியாவிலும் பாஜகவின் வளர்ச்சி அதிகமாகும் எனவும் கருத்து கணிப்புகள் கூறியுள்ளன.
இந்த நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி தமிழகத்தில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் பா.ஜ.க மிக பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அதன் வாக்கு சதவீதம் 19 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் இரண்டு முதல் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை பெறாத அளவு வாக்கு சதவிகிதத்தை பாஜக இந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் எனவும் இந்த கருத்துக்கணிப்பில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் திமுக அதிமுகவை தவிர வேறு கட்சி மாற்றுக் கட்சி இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அ.திமுகவையே பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாமிடம் பிடித்துள்ளது. மேலும் தமிழகத்தில் மோடியின் எதிர்ப்பு தாக்கம் தற்போது அறவே இல்லை. தமிழக பாஜக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த வேகத்தை அதிகமாக்கியுள்ளார் அண்ணாமலை. இதன் காரணமாக தமிழகத்தில் பா.ஜ.க அதிக அளவில் வாக்கு சதவீதம் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் இந்த கருத்துக்கணிப்பில் 2 முதல் 6 இடங்களை கைப்பற்றும் எனவும் அதிமுக ஒன்று அல்லது இரண்டு இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் கொண்ட இண்டி கூட்டணி 48%, பாஜக தலைமையுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி 19 சதவீதம் அதிமுக 17 சதவீதம் பெருமையாகவும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகிறது.
இந்திய ஊடங்கள் மட்டுமின்ன்றி தமிழக செய்தி நிறுவனங்கள் நடத்திய அனைத்து கருத்து கணிப்புகளிலும் பா.ஜ.க இரண்டாமிடம் பெரும் எனவும் மேலும் பல தொகுதிகளை கைப்பற்றும் அ.தி.மு.க மூன்றாமிடம் செல்லும் என தெரிவித்துள்ளது. இது கருத்து கணிப்புகள் அனைத்தும் அதிமுக தரப்பை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.மேலும் வேலுமணி தங்கமணி விஜயபாஸ்கர் அதிமுகவின் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளார்கள். ஆனால் ஜெயக்குமார் தனது மகனின் எம்.பி. சீட்டுக்காக பொதுவெளியில் பாஜகவை விமர்சித்து வருகிறார்.இதோ போல் தான் ஜெயலலிதா இருந்தவேளையில் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த திண்டுக்கல் சீனிவாசன் கே.பி.முனுசாமி போன்றவர்கள் தான் பாஜகவுடன் கூட்டணி வேணாம் என கூறிவருகிறார்களாம் இதன் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி மிக பெரிய குழப்பத்தில் உள்ளாராம்.
அதுமட்டுமில்லாமல் கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் அதிமுக தேர்தல் ஆலோசகராக செயல்பட்டுவந்த சுனில் கனுகோலும் பாஜகவின் கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். சுனில் கணுகோல் பிரசாந்த் கிஷோர் டீமில் மூளையாக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இணைந்துள்ள சுனில் கனுகோல் கர்நாடகாவை சேர்ந்தவர். சமீபத்தில் சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு சுனில் கனுகோல் முக்கிய பங்கு வகித்தார். இவரின் பேச்சை கேட்டு தான் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.கவுடன் இருந்த கூட்டணியை முறித்து கொண்டுள்ளார்.தற்போது வரும் கருத்து கணிப்புகள் தமிழக பாஜகவின்அசுர வளர்ச்சி கண்டு அதிமுக அதிர்ச்சியில் உள்ளார்களாம் மேலும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேரலாமா என்ற பேச்சும் கட்சி நிர்வாகிகளிடத்தில் ஆலோசானையும் கேட்டு வருகிறார்களாம்.
ஆனால் அதிமுக பாஜக ‘கூட்டணி முறிவு தமிழகத்தில் பாஜகவுக்கு பெரும் கைகொடுத்துள்ளது. பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் அண்ணாமலையின் வேகம் என அனைத்தும் சேர்ந்து தமிழக பாஜகவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுக உட்கட்சி பூசலை பார்த்து கொண்டிருந்த நேரத்தில் திமுக அரசின் ஊழல், அராஜகங்களை மக்கள் மேடையில் வைத்து திமுகஅரசுக்கு எதிராக இறங்கி அடிக்க ஆரம்பித்தது தமிழக பாஜக. மேலும் மாநில தலைவர் அண்ணாமலையின் பல வியூகங்கள் பா.ஜ.கவின் அதிவேக வளர்ச்சிக்கு கைகொடுத்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது பாஜக. இதனால் அ.தி.மு.கவுடன் கூட்டணி என்பது சந்தேகமே…..