வசமாக சிக்கிய தி.மு.க..காங்கிரஸ் ஆட்சி செய்யும் போது குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி இடம் பெறவில்லை!
வரும் ஜனவரி 26 ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கு பெறவில்லை என்பதை ஊடகங்களும் தி.மு.கவினரும், தவறாக சித்தரித்து மத்திய அரசின் மீது வன்மத்தை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கு அடிப்படை காரணம் கூட அறியாமல் ஊடங்களால் விவாதங்கள் செய்து வறுகிறது. அலங்கார ஊர்தி தகுதியின் அடிப்படையில் தேர்வு பெறாத செய்தியை. தவறாக சித்தரித்து வருகிறது.
குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்தி எப்போதும் நடைபெறும் நடைமுறையை பிரச்சனையாக கிளப்பியுள்ளது திமுக அரசு. தரமற்ற பொங்கல் தொகுப்பு, ஜீ தமிழ் விவகாரம் காவல்துறை அராஜகம், என ரவுடிகளின் அட்டகாசம் என தமிழகம் சீரழிந்து வருகிறது. இதையெல்லாம் மறைப்பதற்காக மொழி மாநிலம் புறக்கணிப்பு என்ற நாடகத்தை நடத்தி வருகிறது.
குடியரசு தின அணி வகுப்பில் மாநில ஊர்திகள் இடம்பெறும். மோடி அரசு வந்த பின் தான் தமிழக ஊர்தி 2016, 2017, 2019, 2020, 2021 என கடந்த 7ஆண்டுகளில் 5 முறை இடம்பெற்றது இதில் அரசியலும் இல்லை, பேசுவதற்கும் ஒன்றும் இல்லை. தமிழக அலங்கார ஊர்திகள், 2021, 2020, 2019 என மூன்று ஆண்டுகள் தொடர்ந்து குடியரசு அணிவகுப்பில் இடம்பெற வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு கடந்த, 2021ல் தமிழக ஊர்தியில் மாமல்லபுர சிற்ப கலை, 2020ல் அய்யனார் சிலை, பிரமாண்ட முறையில் வலம் வந்தது.
2011 ஆம் ஆண்டு மாநிலத்தில் தி.மு.கவும் மத்தியில் காங்கிரஸும் இருந்த போது குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம் இடம் பெறவில்லை. அப்போது ஏன் கேள்வி கேட்கவில்லை மக்களைத் திசைதிருப்புவதற்கு தற்போது கையில் எடுத்துள்ளார்கள்.காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு 6 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியிலிருந்த 10 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே தமிழக அணிவகுப்பு வாகனம் இடம்பெற்றது. ஆனால் பாஜக ஆட்சியில் இதுவரை 7 ஆண்டுகளில் மட்டுமே 5 முறை தமிழக அணிவகுப்பு வாகனம் இடம்பெற்றுள்ளது. வசமாக மாட்டியுள்ளது திமுக. மொழியை வைத்து அரசியல் செய்யாமல் உருப்படியாக ஆட்சி நடத்தும் வேலையை கவனியுங்கள் என அரசியல் விமர்சகர்கள் விடியல் ஆட்சியின் தலையில் கொட்டு வைத்துள்ளார்கள்.