திடக்கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றாத விதி மீறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் தான் முதலிடம் பிடித்து அதிபட்சமாக ரூ. 15 ஆயிரத்து 419 கோடி தமிழகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய நீர் தரக் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 4 ஆயிரத்து 703 இடங்களில் உள்ள நீர்வளங்களின் நீரின் தரத்தை கண்காணிக்கிறது. 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளுக்கான நீரின் தரத் தரவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 279 ஆறுகளில் 311 மாசுபட்ட ஆற்றப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதாக பல்வேறு மாநிலங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 79 ஆயிரத்து 98 கோடி தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிபட்சமாக தமிழ்நாட்டுக்கு ரூ. 15 ஆயிரத்து 419 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதில் தமிழகம் தான் டாப்…
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா ரூ. 12 ஆயிரம் கோடி மற்றும் மத்தியப் பிரதேசம் ரூ. 9 ஆயிர்த்து 688 கோடி அபராதத்தை எதிர்கொள்கிறது.
நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் பிற சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றாத தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடியம் உத்தரபிரதேசம் ரூ. 5 ஆயிரம் கோடி, பீகார் ரூ. 4 ஆயிரம் கோடி, தெலங்கானா ரூ. 3 ஆயிரத்து 800 கோடி, மேற்கு வங்கம் ரூ. 3 ஆயிரத்து 500 கோடி, கர்நாடகா ரூ.3 ஆயிரத்து 400 கோடி, டெல்லி ரூ. 3 ஆயிரத்து 132 கோடி செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவிட்டுள்ளது.
மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு கால இடைவெளிகளில் நிலப்பரப்பு, கடலோர பகுதிகள் மற்றும் நிலத்தடி நீர் இடங்களை கண்காணிப்பதை இந்தத் திட்டம் உள்ளடக்கி உள்ளது.
இந்த திட்டம் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 516 நகரங்களில் சுற்றுப்புற காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களின் வலையமைப்பை உள்ளடக்கியது.