இந்தியா டுடே ஊடகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் தரக்கூடிய மாநிலமாக இருக்கிறது தமிழகம். என சர்வேயில் முடிவில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காலத்தின் போதும் அதாவது அதிமுக ஆட்சியில் இருந்த பொது தமிழகத்தின் பொருளாதார நிலைமை நல்லபடியாக இருந்தது. ஒரு சில மாநிலங்கள் மட்டும்தான் அப்போது எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. அதில் தமிழ்நாடும் ஒன்றாகும். 21.6 லட்சம் கோடி அளவுக்கு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு உள்ள தமிழ்நாடு இந்த விஷயத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது.
மேலும் ஒட்டுமொத்த வளர்ச்சி குறியீட்டில் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கிறது இந்தியா டுடே சர்வேயில் என திமுக அதை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால்,2018 ல் இருந்தே தமிழகம் முதலிடத்தில்தான் உள்ளது..2004 – 2010 வரை தமிழகம் 4,3 வது இடத்தில்தான் இருந்தது.2012 ல் 4 வது இடத்தில்தான் இருந்தது இதே இந்தியா டுடே சர்வேயில்..ஆனால் 2014 ல் இருந்து அது முதலிடத்தை நோக்கி நகருகிறது.செல்வி.ஜெயலலிதா சிறையிலிருந்த போது ஓபிஎஸ் முதல்வர்,அப்போது அட்டைப்படமாகவே வெளியிட்டார்கள்.
2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளிலும் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருந்தது. தற்போது நான்காவது ஆண்டாக தொடர்ந்து இந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.
இந்த தர வரிசை என்பது 2011 – 2021 ல் நடந்த அதிமுக ஆட்சியின் சாதனையைத்தானே வளர்ச்சி குறியீடாக காட்டுகிறது.2018 – 2021 தொடர்ச்சியாக முதலிடத்தில் உள்ளது தமிழகம் என்றால்? சிறப்பான ஆட்சி நிர்வாகம் நடந்துள்ளது என்றுதானே பொருள்?
மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கொரோனா இரண்டாம் அலை தலைவிரித்தாடியது. இறந்தவர்களின் உடல்களை புதைக்க இடமில்லாமல் அலைந்தார்கள்.அதிலும் மிகப்பெரும் அளவில் கோட்டை விட்டது திமுக அரசு. அதன் பின் மத்திய அரசு நேரடியாக களத்தில் இறங்கி மாநில அரசுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கி ஆக்ஸிஜன் கருவிகள் வழங்கி மக்களை காப்பாற்றியது.
எதிர்க்கட்சியாக இருந்த திமுக கூட்டணி கட்சிகள் தடுப்பூசிகள் பற்றி பொய்யான செய்திகளை பரப்பி மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தினார்கள். அதையும் மீறி முன்கள பணியாளர்களுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி தடுப்பூசி போடப்பட்டதால் இரண்டாம் அலையில் முன்களப்பணியாளர்கள் பல உயிர்களை காத்தார்கள்.
மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்திற்கும் திமுகவின் பி டீம்கள் போராட்டங்கள் செய்து எந்த திட்டத்தையும் கொண்டுவரவிடவில்லை எல்லாத்தையும் மீறி அதிமுக அரசு வெற்றிநடை போட்டுள்ளது என்பது இந்த ஆய்வின் முடிவில் தெரிந்துள்ளது. ஆனால் மழை வெள்ளத்தை கூட சரியாக கையாளாமல் இருக்கும் திமுக அரசோ இவர்கள் ஆட்சி ஏற்றவுடன் தான் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது போன்று ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது.
அதிமுகவுக்கு அறிவுத்தளத்தில் ஆதரவு இல்லை,ஊடக பலம் இல்லை என்பதால் இதை மறைத்துவிட்டார்கள் அவ்வளவுதான்.இதற்கும் திராவிட லேபிள் ஒட்டிவிடுவார்கள்..