“இந்த தமிழ் மண் ஆன்மிக மண், தேசிய மண்” – திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் அண்ணாமலை எழுச்சியுரை. 1, கொரோனாவுக்கு மருந்து இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என பிரதமர் மோதி ஜி செயல்பட்டுக் கொண்டிருந்த போது தமிழக நிதி அமைச்சர் (டக்ள்ஸ் தான்) ‘கொரோனாவுக்கு மருந்து வேண்டும்’ என்று அமெரிக்காவிலிருக்கும் ஒரு கிறிஸ்தவ நிறுவனத்துக்கு கடிதம் எழுதுகிறார். அதுவும் இந்திய அரசின் அனுமதி பெறாமல். பாஜக அதைக் கண்டித்தது, ‘இது அனைவருக்குமான ஆட்சி கிடையாது’ என்று. https://youtu.be/4vc1FpLcyM4?t=472
2, முதலமைச்சர் வாழ்த்து சொல்லித் தான் விநாயகருக்கு பூஜை போடுவோம் என்று கிடையாது. மற்ற மத சகோதரர்களுக்கு முண்டியடித்துக் கொண்டு பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முதலமைச்சர், எந்த விதமான இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல மாட்டேன் என்று முரண்டு பிடிப்பது மதச்சார்பற்ற அரசா? மதச்சார்பற்ற அரசு என்று சொல்ல தகுதியற்ற அரசு இது. ஒரு மதத்துக்கு வாழ்த்து சொல்லி மற்றொரு மதத்துக்கு வாழ்த்து சொல்லாமல் மதக் கலவரத்துக்கு வித்திட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர். பாரத பிரதமர் அனைத்து மதத்தவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறார் . https://youtu.be/4vc1FpLcyM4?t=542 .
3, இரண்டாயிரம் ஆண்டுகளாக புதைக்கப்பட்ட நம் கலாச்சாரத்தை தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறோம். அது ராமர் கோவிலாக இருக்கலாம். காசி விஸ்வநாதர் ஆலயமாக இருக்கலாம். அகல்யாதேவி ஹோல்கர் அவர்கள் முகலாயர்களால் தகர்க்கப்பட்ட இந்து கோவில்களை மீண்டும் கட்டினார். காசி விஸ்வநாதர் கோவிலையும்.. https://youtu.be/4vc1FpLcyM4?t=734 .
4, தமிழகத்தில் தேசியம் கொஞ்சம் குறைவு என்பார்கள் சிலர். சமீபத்தில் ராம் ஜன்ம பூமி டிரஸ்ட் உறுப்பினர் ஒருவரிடம் பேசினேன். அவர் சொன்ன விஷயம் ஆச்சரியமாக இருந்தது. அதிக நிதி கொடுத்த மாநிலங்களில் முதல் மூன்றில் தமிழகமும் ஒன்று என்றார் அவர். ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி இருக்கும் கோவிலுக்கு தமிழர்கள் நிதி கொடுத்திருக்கிறார்கள். இந்த தமிழ் மண் ஆன்மிக மண், தேசிய மண் . https://youtu.be/4vc1FpLcyM4?t=779 .