தமிழகத்தின் அநாகரிக பேச்சுக்களை தொடங்கி வைத்தது யார் ?

தமிழகத்தின் அநாகரிக பேச்சுக்களை தொடங்கி வைத்ததே திராவிட கும்பல்கள் என்பது முக்கால உண்மை

அதுவரை அவையில் பேசுதல் பொதுஇடத்தில் பேசுதல் என்பதில் பலமரபுகள் இருந்தன, பாரத கண்டத்து மரபுகள் அவை

ஆம் தெய்வத்தை வணங்கி , மொழியினை வணங்கி , குருவினை வணங்கி, அவையோரை வணங்கிதான் பேசுவார்கள் அதுவும் பேச்சிலும் மங்கல வார்த்தைகள் மட்டும்தான் பேசவேண்டும் மரியாதையாய் பேசவேண்டும் என்றெல்லாம் விதிகள் உண்டு

இதை அப்படியே மாற்றி “ஏ முட்டாளே, ஏ மானங்கெட்டவனே ஏ காட்டுமிராண்டிபயலே, மானமில்லாதவனே” என அநாகரிக பேச்சை தொடங்கி வைத்தான் ஈரோட்டு ராம்சாமி

அவன் வழிவந்த நாடக கோஷ்டியான அண்ணாதுரையும் கருணாநிதியும் அதில் கரை கண்டன. ஆபாச பேச்சுக்களும் அநாகரிக பேச்சுக்களும் அவர்களின் தனி அடையாளமாயின‌

இதில் அண்ணா இலைமறை காயாக பேசினார், கருணாநிதி இலைவிலக்கி காய்விலக்கி உள்ளே இருப்பதை காட்டி பட்டவர்த்தனமாக பேசும் அநாகரிகவாதியாக இருந்தார்

நேரு இந்திரா உள்ளிட்ட எல்லோரும் அவர்களின் தரம் கெட்ட வார்த்தைக்கு தப்பவில்லை,, திமுக என்றாலே பெண்கள் காதை பொத்தும் மிக கொடிய ஆபாச காலம் அன்று இருந்தது

தலைவன் கருணாநிதி கொட்டி தீர்த்த தைரியத்தில் ஆபாச ஆசான்கள் வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் , மதுரை முத்து என யாரெல்லாமோ வந்து என்னவெல்லாமோ பேசினார்கள்.

1967 வரை கருணாநிதி என்றாலே எல்லோரும் நெளியும் நிலை இருந்தது, அவ்வளவு அநாகரீக வார்த்தைகளை கொட்டினார்

1969ல் அவர் முதல்வராகும் பொழுது காமராஜர் உள்ளிட்ட பெரியவர்களெல்லாம் சொன்னது “இவரிடமா இனி அரசியல் செய்ய வேண்டும்” என்பதே

1970க்கு பின்புதான் கருணாநிதியிடம் பக்குவம் வந்தது ஆனாலும் பல இடங்களில் அநாகரீகம் அவரின் இயல்பில் எட்டிபார்த்தது

சட்டசபையில் ஜெயலலிதா தாக்கபட்டபொழுது அவர் உதிர்த்த வார்த்தைகளெல்லாம் அநாகரீகம்

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் என்பார்கள், கருநாக பாம்பில் இருந்து கருடனா உதிக்கும் என்பார்கள்

ஆம் கருணாநிதியின் வாரிசுகளான ஸ்டாலினும் உதயநிதியும் ஆபாச பேச்சுக்களை பேசி வசமாக சிக்கியிருக்கின்றர்கள்

ஸ்டாலினார் தன் ஜமுக்காள கூட்டத்தில் எதையோ சொல்லி முகம் சுளிக்க வைத்திருக்கின்றார், பெண்கள் தலையில் அடித்து கொண்டு நகர்ந்திருக்கின்றனர்

உதயநிதி சசிகலா பற்றி அநாகரீகமாக உளறியதில் தமிழக அரசியல் பெண்மணிகள் கொதித்தெழுந்திருக்கின்றனர்

ஸ்டாலினோ உதயநிதியோ ஆபாசமாக பேசவில்லை என்றால்தான் ஆச்சரியம் பேசியதில் என்ன உண்டு?

நோ வொண்டர்

இது தேர்தல் கால கதையின் குற்றம் அல்ல, கருணாநிதி வாரிசுகள் வந்த‌ கருவின் குற்றம்.

கட்டுரை எழுத்தாளர்:- ஸ்டான்லி ராஜன்.

Exit mobile version