மத்தியஅரசு கொண்டுவந்த மக்கள் நல திட்டங்களை விளக்கி தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் மாநில தலைவர் வேலூர் இப்ராகிம் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தொடர் பிரசார யாத்திரை மேற்கொள்கிறார். அதன் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசியதாவது-
கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது சீரிய முயற்சியால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு, உயிரிழப்பு குறைந்திருக்கிறது..
இந்தியாவிடம் சீனா வாலாட்ட முடியாது. சீனாவை எதிர்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. சீனாவின் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது.
கொரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டதிட்டங்களை விளக்கி ஒரு முஸ்லீம் யாத்திரையை தொடங்கி உள்ளார். தமிழ் நாடு முழுவதும் அவர் யாத்திரை செல்கிறார். அவரது யாத்திரைக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கட்டுரை: எழுத்தாளர் சுந்தர்.