மாநில தலைவர் கைது – கண்டனம்!!!
தடை செய்ய கொரோனா காரணம் என்று சொன்னால் தமிழகத்தில் திமுக பல போராட்டங்கள் நட்த்தியது, சமீபத்தில் ராஜ்பவன் அருகே போராட்டம் நடத்தியது கட்சிகாரர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடினார்கள். முதல் அமைச்சர் போகின்ற இடங்களில் எல்லாம் பெருத்த அளவில் மக்கள் கூடுகிறார்கள் அந்த இடங்களில் எல்லாம் கொரோனா வராதா?
நேற்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கிறார் அவரை சுற்று மக்கள் நின்று கொண்டிருந்தார்கள் சமுக இடைவெளி அங்கு எங்கே போனது?
எங்களுக்கு அறிவுரை செய்பவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என தெரிந்துகொள்ளவேண்டும்.
நாங்கள் காவல்துறையில் பல நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டிருந்தோம். இன்றைக்கு அனுமதி மறுத்து கைது செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாது.
பெண்களை கேவலமாக பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கைகள் எடுக்கசொன்னோம். தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளித்தோம் நடவடிக்கை எடுத்ததா அரசு?
இதையெல்லாம் அரசு கண்டிக்காது. ஆனால் இதையெல்லாம் எதிர்த்து ஜனநாயக முறையில் பாஜக யாத்திரை நடத்தினால் அனுமதி தர ஏன் மறுக்கிறது அரசு?
கருப்பர் கூட்டம் நம் தமிழ் கடவுளான முருகனை இழிவு படுத்தப்பட்ட போது, திருமாவளவன் கண்டித்தாரா? இல்லை ஏதாவது கட்சி பேசியது தவறு என்று சொன்னார்களா? இதறு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தாரா?
கொரோனா என்ற காரணம் பாஜகவிற்கு மட்டும்தானா? நீதிமன்றம் அரசு முடிவெடுத்து கொள்ளலாம் என்று சொன்ன போது, காவல்துறை தலைவர் அவர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தோம்.
இன்று கொரோனா என காரணம் காட்டி எங்கள் யாத்திரையை தடை செய்கிறீர்களே, இதை ஏன் திமுக கூட்டத்திற்கு செய்யவில்லை? அதிமுக கூட்டங்களுக்கு ஏன் செய்யவில்லை. எத்தனை கூட்டங்கள் சமுக இடைவெளி இல்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஆக நோக்கம் இருக்கிறது,தமிழகத்தில் பெண்களை இழிவுபடுத்தி பேசினாலும் சரி, தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தினாலும் சரி யாரும் அவற்றை எதிர்த்து கேள்விகேட்ககூடாது.
அதனை இழிவுபடுத்துபவர்களுக்கு இருக்கும் உரிமை கூட எதிர்த்து கேள்வி கேட்க உரிமை இல்லையா?
தமிழகம் ஆன்மீக பூமி, எங்கள் கடவுள் முருகனை கொச்சைபடுத்துகிறார்கள். அனைத்து கட்சிகளும் கேவலமாக பேசுகிறார்கள். இதனை எதிர்த்து யாத்திரை நடத்தினால் தடை, கைது என அரசு செய்வது கண்டனத்துக்கு உரியது.
வெற்றிவேல்_யாத்திரை கைது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுசெயலாளர் K.T.ராகவன் கண்டன பதிவு.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















