1990 களில் வில்லன், நடிகர் என நடித்து முன்னணி நட்சத்திரமாக இருந்தவர் பொன்னம்பலம். ஆரம்ப காலகட்டங்களில் தமிழ் திரைப்படங்களில் சண்டை கலைஞராக வந்தவர் பிறகு நடிகராக தன்னை மாற்றிக்கொண்டார். மேலும் விஜய் டிவி பிக் பாஸ்-2 என்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று புகழின் உச்சத்தைத்தொட்டர்.

பொன்னம்பலம் பாஜகவின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நேரங்களில் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து திறம்பட செயல்பட்ட திரைநட்சத்திரத்தில் பொன்னம்பலமும் முக்கியமானவர்.இந்த சூழ்நிலையில் நடிகர் பொன்னம்பலத்திற்கு சிறுநீரக கோளாறு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதனையறிந்த தமிழக பாஜக தலைவர் திரு. எல்.முருகன் அவர்கள் நடிகர் பொன்னம்பலத்தின் வீட்டிற்கே சென்று பொன்னம்பலத்தின் உடல் நலம் குறித்து விசாரித்து அவர்க்கு கட்சி சார்பாக ரூ.2 இலட்சம் நிதி உதவியும் செய்துள்ளார்.