தமிழக பா.ஜ., தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா அறிவித்துள்ளார் இவர் யார் என்பதை பார்ப்போம்.
தமிழக பா.ஜ., தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்பு முதல் , அந்த பதவி காலியாக இருந்தது. அதனை தொடர்ந்து, இந்த பதவிக்கு பலரின் பெயர்கள் அடிபட்டன.
இந்நிலையில், இன்று தமிழக பா.ஜ., தலைவராக யாரும் எதிர்பாரா விதமாக எல்.முருகனை நியமிக்கப்பட்டதாக. அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். முருகன் தற்போது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக உள்ளார்.
நாமக்கல்லை நகரை சேர்ந்த முருகன், சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலையில், இளநிலை சட்டப்படிப்பும், சென்னை பல்கலையில், முதுகலை சட்டப்படிப்பும் படித்துள்ளார். 15 வருட வழக்கறிஞர் அனுபவம் கொண்ட இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
சென்னை பல்கலையில், மனித உரிமைகள் சட்டம் குறித்து பி.எச்டி படித்து வருகிறார்.

தலைவராக தேர்வாகியுள்ள முருகன் கூறுகையில், என் மீது நம்பிக்கை வைத்து பதவி கொடுத்துள்ளனர். அதற்கேற்றவாறு செயல்படுவேன். தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,ஜே பி நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















