=====
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பல்வேறு அறிவுரைகளை வணங்கினார். மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்யும் என்று அப்போது பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
இந்த நிலை புயல் தொடர்பான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி சிறப்பாக செய்தார்..
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மிகத் திறமையாக கையாளப்பட்டது.
தொடர்ந்து மழை கொட்டிய போதிலும் சென்னையில் ஒரு சில பகுதிகளைத் தவிர, முழுமையான மின் வினியோகம் வழங்கப்பட்டது. பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்று கணிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் சில மணி நேரம் மின் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. முன் எப்போதும் இல்லாத வகையில் புயல் பாதிப்பின்போது மின் வினியோகம் மிகத் திறமையாக கையாளப்பட்டது.
இப்படி தமிழக அரசின் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டு, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், அதன் பின் ஏற்பட்ட பாதிப்புகளிலும் தமிழக முதல்வர் கே பழனிச்சாமி தனி முத்திரை பதித்துள்ளார்.
இதன் காரணமாக உயிர் சேதம் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. பொருட் சேதங்களும் மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளமும் உடனுக்குடன் துரிதமாக அகற்றப்ட்டு வருகிறது.
இது போல பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளை முழுமூச்சுடன் பயிர் காப்பீடு செய்ய வைத்ததுள்ளது எடப்பாடியார் அரசு. இதன் மூலம் புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தமிழக முதல்வர் கே பழனிச்சாமிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இது தொடர்பாக தமிழக பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் திறமையான வழிகாட்டுதலின்படி அனைத்து வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுமையாக மேற்கொண்டு, சிறப்பாக செயல்பட்டு, நிபர் புயலை மிகத் திறமையாக எதிர்கொண்டு மக்களைக் காத்த, மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை, தமிழக பாஜக இளைஞரணி மனதார பாராட்டுகிறது.
https://twitter.com/VinojBJP/status/1331861904042561537?s=20
இவ்வாறு பாஜக இளைஞரணி மாநில தலவர்
வினோஜ் ப செல்வம் குறிப்பிட்டுள்ளார் .
=====