தமிழகத்தில் யாருக்காக வேலை செய்தார் பிரசாந்த் கிஷோர் என்ற கேள்வி திமுக பிரமுகர்கள் இடையே மீண்டும் எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக விற்காக அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் இந்த ஆண்டு வேலை செய்தார்.
ஆனால் இவரை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தும் பணியை 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோரை வைத்து அரசியல் பணிகளை மேற்கொண்டு இவரை முதன் முதலில் இந்த பணிக்கு அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி.
அதன்பின்பு பல்வேறு மாநிலங்களில் பாஜக அரசு கொண்டுவர அதற்கான பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வந்தார்.
அதன் பின்பு பாஜக மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையே ஏற்பட்ட உரசலில் அவர் பாஜக விட்டு வெளியேறி வந்து வேலை பார்த்து வந்தார்.
இதன் ஒரு பகுதியாக பிகாரில் நிதீஷ் குமாருக்கு வேலை செய்து அவரை நிதிஷ் -லூலு எதிரியான அவரிடம் கூட்டணி வைத்து வெற்றி பெற செய்து அதன் பின்பு அவர் அந்த கூட்டில் இருந்து வெளியேறி மீண்டும் பாஜக கூட்டணி நிதிஷ்குமார் இணைந்து பாஜகவின் ஆட்சி செய்து வந்தார்.
மேற்குவங்கத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக வின் எதிரியான திரிணமுல் காங்கிரசிற்கு வேலை செய்து வருகிறார்.
ஆனால் தமிழகத்திலோ திமுக கூட்டணியில் காங்கிரசுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
தற்போது மேற்கு வங்கத்தில் வெளிவரும் தகவலின் படி மீண்டும் மம்தா பேனர்ஜி ஆட்சி அமைப்பது மிகவும் கடுமையான சூழல் நிலவுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
ஆனால் தமிழகத்தில் முதல் முறையாக பிரசாந்த் கிஷோர் கமலஹாசனுக்கு பணி செய்தால் அதன் பின்பு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து தான் திமுக உடன் சென்று பிரசாந்த் கிஷோர் பணி செய்தார்.
இதனால் பல்வேறு சந்தேகங்கள் திமுக நிர்வாகிகள் ஏற்பட்டுள்ளது பாஜகவை எதிர்த்து பணி செய்கிறாரா அல்லது பாஜகவிற்கு சாதகமாக திமுகவில் இணைந்து பணி செய்கிறார் பிரசாந்த் கிஷோர் என்று பல்வேறு குழப்பங்களில் திமுக பிரமுகர்கள் சுற்றி வருகின்றனர்.