தமிழகத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அதிமுக ஆட்சியில்தமிழகம் முழுவதும் குடிமாமரத்து பணிகள் செய்யப்பட்ட நிலையில் குளங்களில் தண்ணீர் நிரம்பியது. இதன் காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் சிக்கவில்லை சென்னை பொறுத்தவரை தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக சென்னை நகரின் எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
அதிமுக ஆட்சியில் இது போன்று வெள்ளம் மழை வரும் போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டது. மறுக்கமுடியாத உண்மை. 2015 ஏற்பட்ட வெள்ளத்தில் பிறகு பாடம் கற்றுக்கொண்ட அதிமுக அரசுஅதன் பின் வந்த மழை,புயல் காலங்களில் அதிமுக அரசு மிக கவனமுடன் சிறப்புடனும் செயல்பட்டது. ஆனால் மீடியாக்கள் அனைத்தும் பிரேக்கிங் நியூஸ் போட்டு அதிமுக அரசு ஏதும் செய்யாதது போல் தோற்றத்தை உருவாக்கியது. சிறிய பள்ளங்கள் நீர் தேங்கி இருந்தாலும் அதை பிரேக்கிங் நியூஸ் போட்டு மக்களிடம் அதிமுக அரசினை வாசைபாடினார்கள்.
தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓட்டி செல்கிறார்கள். கடந்த வாரம் சாலையில் உள்ள குழியால் நிலை தடுமாறி அருகே சென்ற அரசுப்பேருந்து மோதி உயிரிழந்தார்.முகமது யூனஸ் என்ற 32 வயதே ஆன மென்பொறியாளர் அரசு பேருந்தில் மோதி சக்கரத்தில் சிக்கி பரிதாப உயிரிழந்தார்,. இந்த காட்சிகள் அச்சாலையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி தற்போது வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது.பலி சம்பவம் நடந்தும் கண்டுகொள்ளாத விடியல் அரசு தற்போது சென்னையை முழ்கடித்துள்ளது.
தற்போதும் மீடியாக்கள் பிரேக்கிங் நியூஸ் போடுகின்றார்கள். சுரங்கப்பாதையில் தண்ணீர் தேக்கம் இளைஞர்கள் சிறுவர்கள் மீன் பிடித்து உற்சாக விளையாட்டு என்று. மீடியாக்கள் திமுக அரசின் நிர்வாக கோளாறு பற்றி வாய் திறக்கவில்லை இதுவே வேறு ஆட்சியாக இருந்தால் மீடியா துணையுடன் மூச்சுக்கு முந்நூறு முறை குறை சொல்லி இருப்பாரர்கள் இப்பொழுது விடியல் ஆட்சியில் குறை எல்லாம் கிடையாது மக்கள் சந்தோசமா மழை நீரில் காகித கப்பல் விட்டு விளையாடி கொண்டு இருக்கிறார்கள். என்ற அளவில் செய்திகளை வழங்கி வருகிறார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். மீம்ஸ்கள் போட்டு தெறிக்கவிடுகிறார்கள்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரடியாக பார்வையிட சென்றிருந்தார். அப்போது ஒரு பகுதியில் சாமியான போட்டு வெள்ளம் பதித்த பகுதியை பார்த்த புகைப்படம் வைரலானது. இது மீடியா முன் சிக்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் நியூஸ் 7 தொலைக்காட்சி ஒருபடி மேல் சென்று திமுகவின் அதிகாரபூர்வ கலைஞர் டிவி யை மிஞ்சியது.
அதிமுக ஆட்சியில் மழை வந்த போது மழை காரணமாக சென்னை சோழிங்கநல்லூர் மேடவாக்கம் பிரதான சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும்அவதி. என செய்தி போட்டது நியூஸ் 7 தற்போது திமுக ஆட்சியில்: மழை காரணமாக சென்னை தி.நகர் ரங்கநாதன் சுரங்கப்பாதையில் நீரில் மீன் பிடிக்கும் இளைஞர்கள் அருகிலுள்ள குளத்திலிருந்து நீர் நிரம்பி சுரங்க பாதைக்கு வருவதால் வரிசையாக நின்று மீன்பிடித்து வருகின்றனர்




