தமிழகத்தின் சிராக் பஸ்வானா மு.க.அழகிரி !

அஞ்சாநெஞ்சர் அண்ணன் அழகிரியை வைத்து பிஜேபி தனிக்கட்சி உருவாக்கும்
வேலைகளை கச்சிதமாக செய்து வருகிறது.

விரைவில் அழகிரி கலைஞர் திமுக என்கிற பெயரில் தனிக்கட்சி தொடங்கி இந்த நாள் என்று அண்ணாமலை பட ரஜினியாக ஸ்டாலினுக்கு எதிராக தொ டை தட்ட இருக்கிறார்.


தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மாதிரி சட்டமன்ற தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விடலாம்
என்று கனவில் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழகத்தில் பிஜேபியின் டார்கெட் லோக்சபா தேர்தல் இல்லை சட்டமன்ற தேர்தல் தான் என்று தெரியாமல் போய் விட்டது.

பிஜேபி யின் நோக்கம் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக துணையுடன் 10-20 தொகுதிகளில் வெற்றிபெற்று சட்டமன்ற த்துக்குள் நுழைய வேண்டும். அதற்கு பிறகு தங்களின் முழு ஆட்டத்தையும வெ
ளிப்படுத்தி தமிழக ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும்.

இதற்கான அனைத்து விதமான செயல் திட்டங்களையும் பிஜேபி உருவாக்கி விட்டது அதில் ஒன்று தான் அழகிரி மூலமாக
திமுகவை உடைப்பது. பிஜேபி நினைத்து இருந்தால் அழகிரியையே பிஜேபிக்கு
வர வழைத்து பதவி கொடுத்து கட்சி பணிக்கு கொண்டு வந்து இருக்க முடியும்.

குஷ்பூவையே பிஜேபிக்கு கொண்டு வந் தவர்களுக்கு அழகிரி ஒன்றும் பெரிய
விசயம் அல்ல. அழகிரி பிஜேபியில் சேர்ந்தால் அதனால் பிஜேபிக்கும் பலனில்லை அழகிரிக்கும் ஆகாது.ஏனெனில் பாரம்பரிய திமுகவினர் அழகிரி பிஜேபியில் இருந்தால் மழைக்கு கூட அவர் வீட்டுப்பக்கம் ஒதுங்க மாட்டார்கள்.

ஆனால் அழகிரி தனிக்கட்சி ஆர்ம்பித்தா ல் ஸ்டாலின் எதிர்ப்புமன நிலையில் திமுகவில் உள்ளவர்கள் அழகிரி கட்சியி ல் இணைவார்கள்.அதோடு திமுகவில் தேர்தல் டிக்கெட் கிடைக்காதவர்களின் புகலிடமாக அழகிரியின் திமுகவாகவே
இருக்க முடியும்.

இதனால் திமுகவுக்கு போட்டியாக அழகிரி திமுக களத்தில் நிற்கும் தொகுதிகளில் திமுக ஓட்டுக்கள் பிரிந்து திமுகவின் வெற்றி அதோ கதியாகி விடும்.

இந்த இடத்தில் அழகிரி திமுகவுக்கு அந்த அளவிற்கு செல்வாக்கு கிடைத்து விடுமா என்று நீங்கள் கேட்கலாம். லோக்சபா தேர்தல் வேறு சட்டமன்ற தேர்தல் வேறு என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்.

சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே வெறும் 1 சதவீத வாக்கு வித்தியாசம் இருந்தாலே
போதும் எதிர் கட்சியின் ஆட்சி கனவு அம்பேல் தான் என்பதற்கு 2016 தமிழக சட்டமன்ற தேர்தலையே கூறலாம்.

அப்பொழுது திமுகவிற்கும் அதிமுகவுக்கும் இடையில் இருந்தது வெறும் 1.03 சதவீ த வாக்கு வித்தியாசம் தான். ஆனால்
அதிமுக 38 தொகுதிகளை திமுக கூட்டணியை விட அதிகமாக பெற்று இருந்தது.

இப்பொழுது பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணிக்கு 37.26 சதவீத வாக்குகளும் ஆர்ஜேடி கூட்ட
ணிக்கு 37.23 சதவீத வாக்குகளும் கிடை த்து இருந்தது. வெறும். 0.3 வாக்கு வித்தியாசம் தான் ஆனால் 15 தொகுதிகளை அதிகமாக பெற்று பிஜேபி கூட்டணி ஆட்சியை பிடித்து விட்டது.

சட்டமன்ற தேர்தலில பல முனை போட்டி நடைபெறும் பொழுது பிரியும் வாக்குகளினால் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சி க்கும்
இடையில் உள்ள வாக்கு வித்தியாசம் குறைந்து விடும். இது ஆளும் கட்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கி விடும்

பீகார் மாதிரியே ஒரு குழப்பமான பலமுனை போட்டியை தமிழக தேர்தல் களத்திலும் பிஜேபி உருவாக்கி விடும் அதில் ஒருபார்ட் தான் அழகிரி அனேகமாக அழகிரி சிராக் பஸ்வான் ரோலை செய்ய இருக்கிறார்.

அழகிரி கட்சி ஆரம்பி த்து அதிமுக பிஜேபி கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கினால் தென் மாவட்டங்களில் திமுகவுக்கு நிச்சயமாக பாதிப்பை உண்டாக்கி விடலாம்.

இப்போதைக்கு திமுக கூட்டணிக்கு தென் மாவட்டங்களில் தான் அதிக செல்வாக்கு இருக்கிறது. இதை காலி செய்ய வேண்டு ம் என்றால் திமுக கூட்டணியில் இருந்து
காங்கிரசையும் இன்னும் சில கட்சிகளையும் வெளியேற வைக்க வேண்டு ம் இது முதல் வேலை இது சசிகலாவின் வேலை.

அடுத்து திமுகவை அமைப்பு ரீதியாக பலவீனமாக்க வேண்டும். இது இரண்டாவது வேலை இது அழகிரியின்வேலை.

இந்த இரண்டும் நடந்து விட்டால் தென் மாவட்ட ங்களில் திமுக காலியாகி விடும்வடக்கு
மாவட்டங்களில் அதிமுக பாமக கூட்டணியும் மேற்கு மாவட்டங்களில் அதிமுக பிஜேபி கூட்டணியும் திமுக கூட்டணியை
விட வலுவாக இருக்கிறது.

இந்த நிலையில் கிழக்கு மாவட்டங்களான டெல்டா மாவட்டங்களில் சசிகலாவை வைத்தும் தெற்கு மாவட்டங்களில்
அழகிரியை வைத்தும் பிஜேபி நடத்த இருக்கிற வாக்கு பிரிப்புகள் மூலமாக பிஜேபி அதிமுக கூட்டணிக்கு வெற்றி
உறுதியாகி விடும்.

தேர்தலுக்கு பிறகு திமுகவுக்கு கிடைத்த தோல்வியால் ஏற்பட்ட ஞானத்தினால் அண்ணன் அழகிரிக்கு திமுகவில் பொறுப்பு கிடைக்கலாம். இல்லை என்றாலும்
பிஜேபி அழகிரியை தென் மண்டல தளபதியாக உருவாக்கி விடும்.

பிரசாந்த் கிஷோரின் சொந்த மண்ணில் அவரது ஆதரவு கட்சிகளை மண்ணை
கவ்வ வைத்து விட்டு தமிழ்நாட்டில் பிரசாந்த் கிஷோர்க்கு பாடம் எடுக்க பிஜேபிகாத்து இருக்கிறது. தமிழக தேர்தலோடு பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசனை வழங்க மட்டுமல்ல ஓட்டு போட கூட
அரசியல் கட்சிகளை தேட மாட்டார்.

கட்டுரை எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி

Exit mobile version