சேலத்தில் பாஜக இளைஞரணி மாநில மாநாட்டுக்குக் குவிந்த இளைஞர் பட்டாளத்தைக் கண்டால் ஏற்படும் நம்பிக்கை..
தாமரை மலர்ந்தே தீரும்..
இத்தனை இளைஞர்கள் கூடிய போதும் – ஒரு குத்துப்பாட்டு டான்ஸ் இல்லை!
ஒரு ‘பிகில்’ சப்த ஆர்ப்பாட்டம் இல்லை!
விண்ணைப் பிளக்கும் விசில் சப்தங்கள் இல்லை!
சாலையின் ஓரமாக விலகி நின்று நெடுஞ்சாலையில் நகரும் வாகனங்களுக்கு வழிவிடும் பக்குவம் இருந்தது!
சில கேந்திரமான இடங்களில் காவல்துறைக்கு உதவியாக அவர்களும் இணைந்து போக்குவரத்தை சீர்படுத்தும் முனைப்பு இருந்தது!
பெண்களுடன் டூவீலர்களில் செல்பவர்களுக்கும், ‘சீனியர் சிட்டிசன்’ களுக்கும் முன்னுரிமை தந்து விலகி வழிவிடும் பக்குவம் இருந்தது!
கெக்கே பிக்கே என்று இளம்பெண்களிடம் வழியாமல், கிடைத்த சந்தர்ப்பத்தில் ‘கடலை’ போடாமல், “ஜி’ இந்தப் பக்கம் வழி விடுங்க,”- “சகோதரி கார் போக வழி கொடுங்க”- என்ற குரல்கள் ஆங்காங்கு இருந்தது!
தலைவா! என் இதயமே! என் நாடி நரம்பே! என் ரத்த நாளமே! என் மலக் குடலே! என் விதைப் பையே!- என்பது போன்ற கோஷங்கள் இல்லை!
ஜெய் ஸ்ரீராம்! பாரத் மாதா கீ ஜெய்! தேசம் காப்போம் – தமிழகம் காப்போம் போன்ற கோஷமே இருந்தது!
பாஜக ஒரு வலிமையான, தேசத்தின் மீது அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட, பெரும் இளைஞர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளது!
மீண்டும் சொல்கிறேன்…
மோடி – அமீத்ஷா வை பார்க்கையில் ஏற்படும் உற்சாகம் – 100 என்று மதிப்பளித்தால்…
இன்றைய பாரதத்தாய் ஈன்ற தமிழ்ப்புதல்வர்களையும் புதல்விகளையும் கண்டபோது ஏற்பட்ட உற்சாகத்துக்கு – 1000 ஸ்கோர் தரலாம்!
முருகனும் – அண்ணாமலை IPS ம் – இளைய தலைமுறையிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக மிக அபாரமானது!
ஜெய் ஹிந்த்!
நன்றிங்க. Murali Seetharaman