உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் வைரஸ் வைரலாக பரவ ஆரம்பித்து விட்டது. இப்போது வரை இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆனது ஆயிரத்தை நெருங்கி விட்டது இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .
இதனை தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் கோரோனோ தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துவருகிறது. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ,பிரதமர் நிவாரண நிதி அளிக்குமாறு இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று பலரும் பிரதமர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியினை அளித்து வருகிறார்கள்.
இதில் டாடா குழுமம் அளித்த நிவாரண தொகை அனைவரையும் வியப்பளித்தது .முதலில் டாடா அறக்கட்டளை சார்பாக 500 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது, அடுத்த இரண்டு மணி நேரங்களில் டாட்டா சன்ஸ் மேலும் ஆயிரம் கோடியை தடுப்பு நடவடிக்கைகள் பணிகளுக்காக ஒதுக்குவதாக அறிவித்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இந்திய நிறுவனமான டாடா நிறுவனம் நிவாரண நிதியாக ஆயிரத்து 500 கோடியை அளித்திருப்பது அனைத்து தரப்பு மக்களிடையே மிக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல அம்பானி கோரோனோ மருத்துவமனை அமைத்து தருகிறார்.

ஆனால் ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் இந்த தி.மு.க வின் சன் குழுமம் இதுவரை நிவாரண நிதி பற்றி வாய் திறக்கவில்லை. கார்ப்பரேட் கார்ப்பரேட் என்று திட்டிய நிறுவங்கள் தான் தற்போது நிதி அளித்து வருகிறது.
சீனாவிற்கு போராடிய ஸ்டெர்லைட் போராளிகள் எங்கு என தெரியவில்லை. வேதாந்த குழுமமும் பெரிய நிதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

