கோவையில் பறந்த தேஜாஸ். இந்திய விமானப் படைக்கு சொந்தமான கோயம்புத்தூருக்கு அருகே உள்ள சூலூர் விமான படை தளத்தில் இருந்து 14 தேஜாஸ் விமானங்கள் ஒரே சமயத்தில் பறந்தது. இஃது ஒரு பயிற்சி பறத்தல் என்றோ அல்லது இடம் மாற்றம் என்றோ இல்லாமல் முழு ஆயுதங்களுடன் அவை பறந்தன.
இது இந்தியாவில் மட்டுமின்றி நமது அண்டை நாடுகளுக்கும் மறைமுகமாக ஒரு தகவல் பட்டவர்த்தனமாக தெரிவிக்க பட்டுயிருக்கின்றன என்கிறார்கள். அது தங்கள் விமானப் படை பலத்தை சொல்லாமல் சொல்லி இருப்பதாக சொல்கிறார்கள்.
போதாக்குறைக்கு மலேசியா வாங்க விரும்பும் போர் விமானங்களில் நமது தேஜாஸ் விமானங்கள் முன்னிலை வகிக்கின்றன என்கிறார்கள். அவர்கள் 36 போர் விமானங்களை வாங்க உலகளாவிய டெண்டர் வெளியிடப்பட்டு அதில் ரஷ்யா, சீனா உட்பட தென்கொரியா நிறுவனங்கள் வரை கலந்து கொண்டு இருந்தன.
பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானிய JF 17 ரக விமானத்தை அவர்கள் காட்சி படுத்தாமல் இதில் கலந்து கொள்வதையே தவிர்த்து விட்டனர்.
காரணம் நமது தேஜாஸ் விமானங்கள் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் JF 17 இயக்கும் பாகிஸ்தான் விமானிகள் மனோ ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட அவர்களின் JF 17 விமானங்களை காட்டிலும் நமது தேஜாஸ் விமானங்கள் தரத்தில்… செயல் திறனில்… ஆகச் சிறந்தவை என்று அவர்களே ஒப்புக் கொண்டதற்கு சமமாக கருதப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க ரஷ்யா தனது மிக் 29 விமானங்கள் மற்றும் மிக் 35 ரக விமானங்களை காட்சிப்படுத்தி இருந்தது. ஆனாலும் அவை விலை அதிகம் என்பதாக மலேசியா கருதுகிறதாம். தவிர அவர்களின் தேவை ஒற்றை இஞ்சின் இலகு ரக விமானங்கள் தான்.
இங்கு மற்றுமோர் விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். ரஷ்யாவின் இலகுரக ஒற்றை இஞ்சின் விமானம் மீது அவர்களுக்கு பெரியதாக ஆர்வம் எழவில்லை என்பதை சூசகமாக காட்டி இருக்கிறார்கள். இது உலக அளவில் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
இது அந்த புதிய ரஷ்ய விமானத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இதனை ரஷ்யா ரசிக்கவில்லை. ஆதலால் தான் அவர்கள் இந்தியா தங்களிடம் தான் 114 விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தை செய்ய இருக்கிறார்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உலகளவில் உண்டாக்கி கொண்டு இருக்கிறார்கள்.இந்தியா திரும்பி கூட பார்க்கவில்லை அதனை.
ஆனால் வேறோர் காரியத்தை சத்தம் இல்லாமல் செய்து இருக்கிறார்கள். அது தான் கடந்த மாதம் ஃபிரான்ஸிடம் இருந்து 24 மிஃராஜ் 2000 விமானங்களை அதுவும் அவர்கள் ஓய்வு கொடுத்து நிறுத்தி வைத்திருக்கும் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
இது சர்வதேச அளவில் பலரது கவனத்தை ஈர்த்தது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.இந்தியா தனது தேவைக்காக மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக 42 ஸ்குவாடர்ன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ஸ்குவாடர்ன் என்பது 12 முதல் 24 எண்ணிக்கையிலான விமானங்களை கொண்ட ஒரு தொகுப்பு. இது நாட்டிற்கு நாடு வேறுபடும். நமது ஸ்குவாடர்ன் ஒன்றுக்கு 18 என்று உள்ளது.
இந்த வகையில் தற்போது நம்மிடம் 32 ஸ்குவாடர்ன் மாத்திரமே விமான படையில் உள்ளது. அதுவும் அடுத்து வரும் ஐந்து முதல் எட்டு ஆண்டுகளில் சுமார் 8 முதல் 12 ஸ்குவாடர்ன் ஓய்வு பெறும் காலத்தில் உள்ளது. இதனை சீர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் நமக்கு உள்ளது.
அதுவும் தவிர தற்போது உள்ள சூழ்நிலையில் எல்லைப்புற விஷயங்கள் அவ்வளவு உவப்பானதாக இல்லை. இவையெல்லாம் கருத்தில் கொண்டே ஃபிரான்ஸிடம் இருந்து 24 மிஃராஜ் 2000 விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதில் 13 விமானங்கள் நன்கு பறக்கும் நிலையில் இருக்கின்றன.
மற்றவை சிற்பல குறைபாடுகளுடன் இருக்கிறது.
நம் இந்திய விமானப் படையில் சுமார் 50 மிஃராஜ் 2000 விமானங்கள் இருக்கிறது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டே ஃபிரான்ஸிடம் இருந்து 24 விமானங்கள் வாங்கப்படுகிறது.நாளையே நமது விமானங்களுக்கு தேவைப்படும் உதிரி பாகங்களுக்கு இவை பயன் படுத்தி கொள்ள முடியும். தவிர நம் விமான படை வீரர்களுக்கு பரிச்சயமான ஒரு விமான ரகம்.
இது போக நம் எல்லையில் பறக்க ஏற்ற ரகம் என்பது கணக்குகள் இந்தியாவிடம் உண்டு.தவிர வேறோர் தகவல்களை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். அது தான் சுவாரஸ்யமான சமாச்சாரம்.
ஆனானப்பட்ட சீனாவை சமாளிக்க அதன் படைகளை எதிர்கொள்ள இந்த விமானங்களே அதிகம் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்தியா தன் வசம் உள்ள படைகளையும் மற்றும் அதன் ஆயுத தளவாடங்களை கொண்டே தன்னந்தனியாகவே சீனாவை எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் என்கிறார்கள்.
இது தான் தற்போது உலக அளவில் பலரது புருவத்தை உயர செய்து இருக்கிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















