செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த இந்து அறநிலைய துறை அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படாத நிலை உருவாகும் போது பக்தா்களின் தரிசனத்துக்காக கோயில்கள் திறக்கப்படும் என்றாா். இது மக்களிடைய பல்வேறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் மாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்ள் தங்களின் வாழ்வாதரத்தை இழந்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மேலும் இந்த நிலையில் டாஸ்மாக் திறந்துவிடப்பட்டுள்ளது. பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. தற்போது கொரோனாவால் பலி இல்லை என்றால் தான் கோவில்கள் திறக்கப்படும் என சொல்வது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கரொனா பயம் நீங்க மற்றும் உற்றார் உறவினர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும்பொழது மன உளைச்சலில் இருந்து விடுபட கோயில்களுக்கு சென்று மன நிம்மதி அடைய உளவியல் ரீதியாக ஒரே வழி தெய்வ வழிபாடுதான். மற்றும் வேலை வாய்ப்பு, வருமானம், எதிர்காலம் பற்றிய சிந்தனை இவற்றால் மனநிம்மதி அடைய உளவியல் ரீதியான ஒரே வழி இது மட்டுமே .
குடிகாரர்கள் நிம்மதி அடைய டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டு அப்பாவி மக்களுக்கு மட்டும் கோயில்களை திறக்க மறுப்பது அநீதி என்று மனசாட்சி உள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். தொற்று குறைந்து போனதால் டாஸ்மாக் திறந்தீர்கள் என்றால் கோவிலை மட்டும் ஏன் திறக்க கூடாது என்ற கேள்வி அனைவருக்கும் வரும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.














