லடாக் எல்லையில் பதற்றம் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் ! சீன வீரர்கள் 5 பேர் பலி! INDIA VS CHINA

லடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன இடையே நடந்த தீடிர் மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், ராணுவ வீரர்கள் 2 பேரும் இந்த மோதலில் வீர மரணம் அடைந்துள்ளதாக, பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது

இந்த நிலையில் லடாக் எல்லையில் சில வாரங்களாக இந்தியா – சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு நாட்டு ராணுவத்தின் படைப்பிரிவு தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய படைகள் மீது சீன ராணுவம் திடீரென அத்துமீறியது. இரு நாடுகளுக்கிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் என 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீனா தரப்பிலும் 5 வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் தங்கள் எல்லைக்குள் இந்தியா தான் ஊடுருவியதாக சீனா குற்றம்சாட்டியது. தன்னிச்சையாக எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இந்த மோதலில் சீன தரப்பில் 3 முதல் 5 பேர் வரை இறந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் பல வீரர்கள் காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் சில பகுதிகளி ல் நிலவும் வன்முறையை குறைக்க இந்திய- சீன ராணுவ மேஜர் ஜெனரல்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.சீன ராணுவத்தால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த 3 இந்திய வீரர்களில் ஒருவர் பெயர் பழனி. இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார். 22 ஆண்டுகளாக பணிபுரியும் இவர், ஹவில்தாராக உள்ளார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version