மசூதிக்குள் மறைந்திருந்து தீவிரவாதிகள் தாக்குதல் ! குழந்தையுடன் வந்த முதியவர் உயிரிழப்பு ! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

தற்போது சீன மற்றும் இந்திய எல்லை பிரச்சனை ராணுவ வீரர்களின் மோதல் என நடந்து கொண்டிருக்கும் வேளையில் நாட்டிற்குள் இருந்து கொண்டே இந்தியாவை துண்டாட நினைக்கும் தேசவிரோதிகளுடன் போராடி கொண்டிருக்கிறது ராணுவம். ஜம்மு காஷ்மீர், மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சண்டையில் முதியவர் மற்றும் ஒரு வீரர் உயிரிழந்தார். சோப்பூர் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார்கள். அப்போது, மசூதியில் ஒளிந்து கொண்டு தீவிரவாதிகள் பாதுகாப்பு வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த திடீர் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.மோதல் நடந்த அந்த நேரத்தில் ஸ்ரீநகரில் இருந்து கார் ஒன்றில் ஒருவர் தனது 3 வயது பேரக்குழந்தையுடன் ஹந்த்வாரா நோக்கி சென்று கொண்டிருந்தார்.

தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக அச்சமடைந்த அந்த நபர் காரை நிறுத்திவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல ஓட்டினார் ஆனால், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவர் மீது குண்டு பாய்ந்தது அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார் அவர் கையில் வைத்திருந்த 3 வயது குழந்தை உயிர் தப்பியது. தாத்தா இறந்தது தெரியாமல் சடலத்தின் அருகில் அழுது கொண்டிருந்த குழந்தையை சிஆர்பிஎப் வீரர்கள் மீட்டனர். இந்நிலையில், துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தனது தாத்தாவின் உடல் மீது அமர்ந்து கொண்டு, அந்த சிறுவன் அழுதுக் கொண்டிருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல், அந்த சிறுவனை வீரர்கள் மீட்டு தூக்கிச் செல்லும் புகைப்படத்தை, ஜம்மு காஷ்மீர் போலீசார் டிவிட்டர் பக்கத்தில் பகிந்துள்ளனர்.இந்த வீடியோ நெஞ்சை உருகவைத்துள்ளது

பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் கேரி எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் அதிகாலையில் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் . அந்த நேரத்தில், இந்திய எல்லைக்குள் 400 மீட்டர் தூரத்துக்கு ஒரு கும்பல் ஊடுருவி வந்தது. இதனை பார்த்த ராணுவத்தினர் வீரர்கள் ஊடுருவிய கும்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டி அடித்தனர். இதில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. ஊடுருவ முயன்ற கும்பலை சேர்ந்தவர்கள் பதுங்கி உள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டனர்.

Exit mobile version